வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் – விளையாட்டுப் போட்டி!!

யாழ்ப்பாணம் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடைபெற்றன.

பாடசாலை அதிபர் திருமதி. ரி .நவரட்ணம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி. விஜயகலா மகேஸ்வரன், சிவன் அறக்கட்டளை இயக்குனர் கணேஸ்வரன் வேலாயுதம் மற்றும் கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழை்வில் கடந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மருத்துவ பீடத்துக்கும், பொறியியல் பீடத்துக்கும் தெரிவான இரு மாணவிகளுக்கும் தலா 10000 ரூபாவும், முகாமைத்துவ பீடத்துக்கும் தெரிவாகிய 6 மாணவிகளுக்கு தலா 5000 ரூபாவும் புலமைப் பரிசில் நிதி உதவி வழங்கப்பட்டது.

You might also like