வலி. தென்மேற்குப் பிரதேச சபையில் வரவு–செலவுத் திட்டம் தயாரிப்பதில் இழுபறி

0 28

வலி. தென்மேற்குப் பிரதேச சபைக்கான வரவு – செலவுத் திட்டம் தயாரிப்பதற்கு முன்னோடியாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம், உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டை அடுத்து எந்தவிதத் தீர்வுமின்றி ஒத்திவைக்கப்பட்டது.

வலி. தென்­மேற்­குப் பிர­தேச சபைக்கு அடுத்த ஆண்­டுக்­கு­ரிய வரவு – செல­வுத் திட்­டம் தயா­ரிக்­கும் நட­வ­டிக்­கை­கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

இது தொடர்­பாக உறுப்­பி­னர்­க­ளின் கருத்­துக்­களை அறி­வ­தற்­கான முன்­னோ­டிக் கூட்­டம் நேற்­று­முன்­தி­னம் புதன்­கி­ழமை பிற்­ப­கல் 2 மணிக்கு சபை மண்­ட­பத்­தில் தவி­சா­ளர் அ.ஜெப­நே­சன் தலை­மை­யில் நடை­பெற்­றது. இந்­தக் கூட்­டத்­தில் ஏழு கட்­சி­க­ளைச் சேர்ந்த 28 உறுப்­பி­னர்­க­ள் கலந்­து­கொண்­ட­னர்.

வரவு – செல­வுத் திட்­டம் தயா­ரிப்­பது சம்­பந்­த­மாக தவி­சா­ளர் தனது கருத்தை முத­லில் தெரி­வித்­தார். ‘‘இரு­பத்­தெட்டு கிராம அலு வலா் பிரி­வு­க­ளி­லு­மா­கச் சேர்த்து சபை­யின் நிதி வளத்­தை­யும் தேவைப்­பா­டு­க­ளை­யும் கருத்­தில் கொண்டு உறுப்­பி­னர்­கள் தமது கருத்­துக்­க­ளை­யும் திட்­டங்­க­ளை­யும் முன்­வைக்க வேண்­டும்’’ என்று தவி­சா­ளர் கேட்­டுக்­கொண்­டார். எனி­னும் சில உறுப்­பி­னர்­கள் கிராம அலு வலா் பிரி­வு­க­ளி­னூ­டாக அல்­லா­மல் வட்­டார ரீதி­யாக நிதி ஒதுக்­கப்­பட்டு வரவு – செல­வுத் திட்­டம் தயா­ரிக்­கப்­பட வேண்­டும் என்­றும், வேறு­சி­லர் உறுப்­பி­னர்­க­ளி­னூ­டாக நிதி ஒதுக்­கப்­பட வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­தி­னர். உறுப்­பி­னர்­க­ளி­டையே ஒரு­மித்த கருத்து ஏற்­ப­டா­ததை அடுத்து எந்­தத் தீர்­வு­மின்­றிக் கூட்டம் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

You might also like