வவு­னியா அணி இறு­திக்­குத் தகுதி!!

இலங்கை கிரிக்­கெட் சபை­யால் நடத்­தப்­ப­டும் 23 வய­துக்கு உட்­பட்ட வட­மா­காண அணி­க­ளுக்கு இடை­யி­லான துடுப்­பாட்­டத் தொட­ரில் வவுனியா மாவட்ட அணி இறு­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றது.

கிளி­நொச்சி மத்­திய கல்­லூரி மைதா­னத்­தில் அண்­மை­யில் இந்த அரை­யி­றுதி ஆட்­டம் இடம்­பெற்­றது. வவு­னியா மாவட்ட அணியை எதிர்த்து கிளி­நொச்சி மாவட்ட அணி மோதி­யது.

நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற வவு­னியா மாவட்ட அணி முத­லில் களத்­த­டுப்­பைத் தீர்­மா­னித்­தது. இதன்­படி முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய கிளி­நொச்சி மாவட்ட அணி 45.2 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 209 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது.

பிர­தீ­சன் ஆட்­ட­மி­ழக்­கா­மல் 54 ஓட்­டங்­க­ளை­யும், துவா­ர­கன் 40 ஓட்­டங்­க­ளை­யும், ஜெனி­சன் 31 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர். பந்­து­வீச்­சில் றுசாந்­தன், வசந்­தன் இரு­வ­ரும் தலா 3 இலக்­கு­க­ளை­யும், டக்­சன் 2 இலக்­கு­க­ளை­யும் வீழ்த்­தி­னர்.

210 ஓட்­டங்­க­ளைப் பெற்­றால் வெற்­றி­யென்ற இலக்­கு­டன் பதி­லுக்­குக் கள­மி­றங்­கிய வவு­னியா மாவட்ட அணி 39.2 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­கள் நிறை­வில் 7 இலக்­கு­களை இழந்து 213 ஓட்­டங்­க­ளைப் பெற்று வெற்­றி­பெற்­றது.

அதி­க­பட்­ச­மாக றுசாந்­தன் 53 ஓட்­டங்­க­ளை­யும், சையூ­ரன் 46 ஓட்­டங்­க­ளை­யும், திவா­கர் 33 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர். பந்­து­வீச்­சில் பார்த்­தீ­பன் 3 இலக்­கு­க­ளை­யும், சுபி­க­ரன் 2 இலக்­கு­க­ளை­யும் கைப்­பற்­றி­னர்.

You might also like