வவுணதீவு படுகொலை- வவுனியாவில் கவனவீர்ப்பு!!
வவுணதீவில் படுகொலை செய்யபட்ட இரண்டு பொலிஸ்உத்தியோகத்தர்களின் இறப்புக்கு நீதி கோரி வவுனியாவில் இன்று கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
சமாதானத்தை விரும்பும் சிவில்அமைப்பின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
மட்டக்களப்பு வவுணதீவுப் பகுதியில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.