வவுனியாவில் 10 அடி நீளமான முதலை மீட்பு

0 38

வவு­னியா நாகர் இலுப்­பைக்­கு­ளத்­தில் 10 அடி நீள­மான முதலை மீட்­கப்­பட்டுள் ­ளது.
நேற்­றுக் காலை ஆறு மணி­ய­ள­வில் நாகர்­இ­லுப்­பைக்­குள வீதி­யில் இந்த முதலை காணப்­பட்­டுள்­ளது. அந்தப்­ப­கு­தி­யில் நின்ற மாடு­களை குறி­வைத்த முத­லையை அவ­தா­னித்த வயோ­தி­பர் ஒரு­வர் ஏனை­யோ­ருக்குத் தக­வல் வழங்­கி­யுள்­ளார்.

இதனை அடுத்து ஒன்­று­சேர்ந்த பொது­மக்­கள் மற்­றும் இளை­ஞர்­கள் முத­லையைப் பிடிப்­ப­தற்கு முற்­பட்­ட­னர். முயற்சி பய­ன­ளிக்­கா­மை­யால் பொலி­ஸா­ருக்­கும் வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­க­ளத்துக்கும் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது. விரைந்­து­வந்த மன்­னார், மடு வன­ ஜீ­வ­ரா­சி ­கள் திணைக்­க­ளத்­தி­னர் கடும் சிர­மத்­திற்கு மத்­தி­யில் முத­லையைப் பிடித்­த­னர்.

பிடிக்­கப்­பட்ட முதலை பாது­காப்­பான பகு­திக்­குள் விடப்­ப­ட­வுள்­ளது.

You might also like