வாகனத்தைத் திருடியவருக்கு  -காத்திருந்த சடலம்!!

0 10

இறுதி ஊர்வலத்துக்காக சடலத்துடன் சவப்பெட்டி வாகனத்தில் இணைக்கப்பட்டிருந்தது. அது தெரியாமல், வாகனத்தை திருடிச் சென்ற நபரைப் பொலஸார் கைது செய்துள்ளனர்.

மெக்சிகோ நாட்டின் மத்திய பகுதியில் இருக்கும் லாகியூபாகியூ பகுதியில் உள்ள மருத்துவமனையில் 80 வயது முதியவர் உயிரிழந்தார். அவரது சடலம் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு பின்னர் அருகிலுள்ள அவரது ஊருக்கு கொண்டு செல்வதற்கான வாகனத்தில் வைக்கப்பட்டது.

இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த 40 வயதுமிக்க நபர், சாவியுடன் வாகனம் நின்றிருந்ததைப் பார்த்ததும், வாகனத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி விட்டார். வாகனம் மற்றும் சடலத்தை காணததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பொலிஸாரிடம் முறையிட்டனர்.

40 நிமிட தேடுதல் வேட்டைக்குப் பின்னர் நெடுஞ்சாலையில் வாகனத்தை மடக்கிப்பிடித்த பொலிஸார் சடலத்தை மீட்டனர். வாகனத்தை திருடிய அந்த நபரையும் கைது செய்தனர்.

You might also like