வாகன விபத்தில் சிறுமி உட்பட ஐவர் படுகாயம்

பொலனறுவை மனம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், சிறுமி உட்பட ஐவர் காயமடைந்தனா்.

அரலகன்வில பகுதியிலிருந்து பொலனறுவை மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்த துவிச்சக்கர வண்டியை பின்னால் வந்த வாகனமொன்று மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இந்நிலையில், மோதிய வாகனம் தொடர்பான எவ்வித
தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி மற்றும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நால்வரும் பொலனறுவை ஆதார மருத்துவமனையில் யில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், கண்டி தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.

 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலனறுவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like