வாய்க்காலில் வீசப்பட்ட புத்தர் சிலைகள் -தேரர்கள் கடும் எதிர்ப்பு!!

வாய்க்காலில் வீசப்பட்டிருந்த புத்தர் சிலைகள் சிலவற்றைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கொழும்பு இராஜகிரியவில் 12 புத்தர் சிலைகள் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டர் சைக்கிளில் வந்த சிலர் புத்தர் சிலைகளை அங்கு வீசி விட்டுச் சென்றதை நேரில் பார்த்தவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை அறிந்த பிக்குமாரும் அந்தப் பகுதிக்குச் சென்றமையால் அங்கு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

இதுவொரு திட்டமிட்ட இனவாத செயல் என்றும் இந்த நாசகார வேலையில் ஈடுபட்ட இனவாதிகளை உடனடியாக கைது செய்யுமாறும் தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நாரஹேன்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like