side Add

விங்ஸ் அணி சம்­பி­யன்!!

யாழ்ப்­பா­ணம்,  நெடுந்­தீவு பிர­தேச செய­லக பிரி­வுக்­குட்­பட்ட பதிவு செய்­யப்­பட்ட விளை­யாட்­டுக் கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான கரப்­பந்­தாட்­டத் தொட­ரில் ஆண்­கள் பிரி­வில் விங்ஸ் அணி கிண்­ணம் வென்­றது.

நெடுந்­தீவு மகா வித்­தி­யா­லய மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் விங்ஸ் அணியை எதிர்த்து உத­ய­சூ­ரி­யன் அணி மோதி­யது.

மூன்று செற்­க­ளைக் கொண்­ட­தாக ஆட்­டம் அமைந்­தது. முத­லா­வது செற்றை 25:19 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் தன­தாக்­கி­யது விங்ஸ். இரண்­டா­வது செற்றை 25:21 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் தன­தாக்­கி­யது உத­ய­சூ­ரி­யன்.

முத­லிரு செற்­க­ளின் நிறை­வில் இரண்டு அணி­க­ளும் தலா ஒவ்­வொரு வெற்­றி­யு­டன் இருந்­தன. மூன்­றா­வது செற்றை 25:17 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்றி 2:1 என்ற செற் கணக்­கில் கிண்­ணம் வென்­றது விங்ஸ்.

You might also like