விஜயகலாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!!

“விடுதலை புலிகளின் இயக்கம் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்துத் தொடர்பிலான வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை கொழும்பு  கோட்டை நீதிமன்றில், பிரதான நீதவான் லங்கா ஜயரத்த தலைமையில் இடம்பெற்றது.

விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு காணப்படும் வாய்ப்புகள் தொடர்பில் இதுவரை சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கப் பெறவில்லை என ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் இன்று நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

You might also like