side Add

விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுவர்கள்- விசாரணைக்கு ஐ.நா. அழுத்தம்!!

ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படையினர் நடத்திய விமான தாக்குதலில் அப்பாவிச் சிறுவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

ஏமன் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுதி புரட்சிப் படையினர் கடந்த இரண்டு வருடங்களாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏமனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சடா நகரில் ஹவுதி புரட்சிப் படையினரை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் நேற்று விமானத் தாக்குதல் நடத்தினர். இதில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 12 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியானது.

ஆனால், அந்தத் தாக்குதலில் 29 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பின்னர் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், சிறுவர்கள் கொல்லப்பட்டமை குறித்து ஐக்கிய நாடுகள் சபை விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

You might also like