விழிப்­ப­டை­வோம்!

இலங்­கை­யில் ஒவ்­வொரு ஆண்­டும் 2 ஆயி­ரத்து 500 பெண்­கள் மார்­ப­கப் புற்­று­நோ­யால் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர் என்று அதிர்ச்­சி­க­ர­மான தக­வலை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார் சுகா­தா­ரப் பிரதி அமைச்­சர் பைசல் காசீம். இந்த நோயைத் தொடக்­கத்­தி­லேயே கண்­ட­றிந்­தால் அதைக் குணப்­ப­டுத்­தி­விட முடி­யும் என்­றும் அவர் சுட்­டிக்­காட்­டு­கின்­றார். அதற்­கான விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் முக­மாக ஐப்­பசி மாதத்தை மார்­ப­கப் புற்­று­நோய் மாத­மா­க­வும் அரசு அறி­வித்­தி­ருக்­கின்­றது.

உல­கெங்­கும் பெண்­க­ளுக்கு ஏற்­ப­டும் புற்­று­நோய்­க­ளில், 10.4 சத­வீ­தமானது மார்­ப­கப் புற்­று­நோயே! இது தோல் மேல் ஏற்­ப­டாத புற்­று­நோ­யில் இரண்­டா­வது இடத்­தை­யும் (நுரை­யீ­ரல் புற்­று­நோய்க்கு அடுத்­த­தாக) புற்­று­நோ­யால் ஏற்­ப­டும் இறப்­பு­க­ளுக்கு ஐந்­தா­வது பெரிய கார­ண­மா­க­வும் இருக்­கி­றது. 2004ஆம் ஆண்­டில், உல­கெங்­கும் 5இலட்­சத்து 19 ஆயி­ரம் இறப்­பு­கள் இந்த நோயால் சம்­ப­வித்­தி­ருக்­கின்­றன. மார்­ப­கப் புற்­று­நோ­யா­னது, ஆண்­களை விட 100 மடங்கு அதி­க­மா­கப் பெண்­க­ளுக்கு வரு­வ­தற்­கான வாய்ப்­பு­களே உள்­ளன.

மார்­ப­கப் புற்­று­நோய்க்கு எதி­ரான உல­க­ளா­விய போராட்­டம் ஒரு தொடர் போராட்­ட­மா­கவே இருந்து வரு­கின்­றது. என்­ன­தான் மருத்­து­வம் முன்­னேறி இருந்­தா­லும் இன்­றும்­கூ­டப் பெண்­க­ளின் உயி­ரைப் பறிக்­கும் ஒரு முக்­கிய கொலை­கார நோயாக மார்­ப­கப் புற்­று­நோய் காணப்­ப­டு­கின்­றது. வட அமெ­ரிக்கா, மேற்கு ஐரோப்பா போன்ற தொழில்­ம­ய­மாக்­கப்­பட்ட நாடு­க­ளில் இந்த நோயால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­கள் அதி­கம். முன்­பெல்­லாம் ஆசி­யா­வி­லும் ஆபி­ரிக்­கா­வி­லும் அரி­தா­கவே தென்­பட்ட இந்த நோய் இப்­போது அநே­க­ரைத் தாக்­கி­யி­ருக்­கி­றது. அதோடு, இறப்பு விகி­த­மும் அதி­க­ரித்­தி­ருக்­கி­றது. ஏன்? தொடக்க நிலை­யில் இந்த நோயை அலட்­சி­யம் செய்­கி­றார்­கள். முற்­றிப் போன­தற்­குப் பின்­னர் தான் மருத்­து­வர்­களை நாடிப் போகி­றார்­கள் என்­கிற குற்­றச்­சாட்­டுப் பர­வ­லாக உள்­ளது.

வய­தான பெண்­க­ளைத்­தான் இந்த நோய் அதி­கம் தாக்­கு­கி­றது. இந்த நோயால் பாதிக்­கப்­பட்ட கிட்­டத்­தட்ட 80 சத­வீத பெண்­கள் 50 வய­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள். ஆனால், ஒரு சந்­தோ­ஷ­மான குறிப்பு என்­ன­வென்­றால் இந்த நோயைக் குணப்­ப­டுத்த முடி­யும். சொல்­லப்­போ­னால், இந்த நோய் தாக்­கிய பெண்­க­ளில் 97 சத­வீ­தம் பேர் ஐந்து வரு­டங்­க­ளுக்­குப் பிற­கும் ஆரோக்­கி­ய­மாக இருக்­கி­றார்­கள். ஆரம்பக் கட்­டத்­தி­லேயே நோயைக் கண்­ட­றிந்­த­தும், உட­லின் மற்­றப் பாகங்­க­ளுக்­குப் பர­வு­வ­தற்கு முன்பே சிகிச்சை எடுத்­தும்­கொண்­டால் நோயைக் கட்­டுப்­ப­டுத்­த­லாம்.

மார்­ப­கப் புற்­று­நோய் எப்­படி வரு­கி­றது? மார்­ப­கத்­தி­லுள்ள ஒரு கலம் (செல்) மட்­டும் ஜெட் வேகத்­தில் பிரிந்து வள­ரத் தொடங்­கும். பின்பு அது படிப்­ப­டி­யாக ஒரு கட்­டி­யாக மாறும். அந்­தக் கலங்­கள் எப்­போது மற்­றத் திசுக்­களை ஆக்­கி­ர­மிக்­கத் தொடங்­கு­கின்­ற­னவோ அப்­போ­து­தான் அது புற்­று­நோய்க் கட்­டி­யாக மாறு­கி­றது. சில கட்­டி­கள் வேக­மாக வள­ரும். சில கட்­டி­கள், பத்து வரு­டங்­கள் ஆனால்­கூட வெளியே தெரி­யாது என்­கின்­றன மருத்­துவ வட்­டா­ரங்­கள்.

கட்­டி­யி­லி­ருந்த புற்­று­நோய்க் கலங்­கள் குருதி ஓட்­டத்­தின் மூல­மா­கவோ, நிண­நீர் மண்­ட­லம் வழி­யா­கவோ மற்ற இடங்­க­ளுக்­கும் பரவி, மறு­ப­டி­யும் வள­ரத் தொடங்­க­லாம். அது நம்­மு­டைய மூளை, ஈரல், எலும்பு மஜ்ஜை அல்­லது நுரை­யீ­ரல் போன்ற முக்­கிய உறுப்­பு­க­ளுக்­கும் திசுக்­க­ளுக்­கும் பர­வும்­போ­து­தான் (Metastasis)உயிர்க்­கொல்லி நோயாக மாறு­கி­றது.

தொடக்க நிலை­யி­லேயே இதைக் கண்­ட­றிந்­து­விட்­டால் குணப்­ப­டுத்­து­வது எளிது என்­கின்­றன மருத்­துவ வட்­டா­ரங்­கள். இலங்­கை­யில் இந்த நோய் முற்­றிய நிலை­யி­லேயே பல­ருக்­கும் கண்­ட­றி­யப்­ப­டு­கின்­றது. மார்­ப­கங்­கள் குறித்­துச் சமூ­கத்­தில் காணப்­ப­டும் பண்­பாட்­டுக் கருத்­து­ரு­வாக்­கங்­க­ளும் நோயைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தில் செல்­வாக்­குச் செலுத்­து­கின்ற முக்­கிய கார­ணங்­கள். இந்த நிலைமை மாற்­றப்­ப­ட­வேண்­டும். பெரு­மெ­டுப்­பில் விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தன் மூலம் மார்­ப­கப் புற்­று­நோ­யைத் தடுப்­ப­தில் கவ­னம் செலுத்­து­வோம். உயிர்­க­ளைக் காவு கொடுப்­ப­தைத் தவிர்ப்­போம்!

You might also like