side Add

விவசாயஅமைப்புக்கள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தை உறுகாம நீர்ப்பாசன திட்டத்திலிருந்து பிரிப்பதற்கு இராஜாங்க அமைச்சரொருவர் எடுத்து வரும் முயற்சியைக் கைவிடுமாறு கோரி செங்கலடி நகரில் இன்று ஆர்்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மத்திய நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழுள்ள வாகனேரி நீர்ப்பாசன திட்டமானது பல வருடங்களாக உறுகாம நீர்ப்பாசன திட்டத்தினால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த திட்டத்திலிருந்து வாகனேரித் திட்டத்தை பிரிப்பதற்கு எந்தவொரு விவசாயிகளும் விருப்பாத நிலையில் புதிதாக நீர்பாசன இராஜாங்க அமைச்சுப் பொறுப்பினைப் பெற்றவர் தான்தோன்றித்தனமாக விவசாய அமைப்புகளிடம் எவ்வித ஆலோசனைகளையும் பெறாமல், வாகனேரி திட்டத்தைப் பிரிப்பதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்ட முடிவில் மாவட்டச் செயலர் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தனிடம் மனுக் கையளிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழுள்ள 14 அமைப்புக்களின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், இலங்கைத் தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், முன்னாள் பிரதியமைச்சர் வி.முரளிதரன் (கருணா அம்மான்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You might also like