விஸ்வாசம்’ படப்பாடல் சாதனை!!

அஜித், நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கிய விஸ்வாசம் திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘அடிச்சுத் தூக்கு’ என்ற முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

குத்து பாடலாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பாடல் வெளியான 1 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அப்போது அறிவித்திருந்தது.

வெளியாகியுள்ள ‘வேட்டி கட்டு’ பாடல் வெளியான 50 நிமிடங்களில் 2 லட்சம் விருப்பத்தைப் பெற்றிருப்பதாகவும், ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளதாகவும் லஹரி மியூசிக் நிறுவனம் கூறியுள்ளது.

You might also like