side Add

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வீடமைப்புத் திட்டம் நாளை ஆரம்பம்!!

வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்தும் கொடுக்கும் பணிகள் நாளை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்படும் என்று தேசிய வீடமைப்பு அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு வீடுகளை அமைத்தல் மற்றும் திருத்தப் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் எல்.எஸ் .பலந்தூரிய வடக்குக்கு வருகை தரவுள்ளார்.

வடக்கில் அண்மையில் பெய்த மழையால் கிளிநொச்சி ,முல்லைத்ததீவு உள்ளிட்ட வடக்கின் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கின. பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் குடியிருப்புக்களின் எண்ணிக்கை தொடர்பில் பிரதேச மற்றும் மாவட்டச் செயலகத்தினர் கணக்கெடுப்புக்களை மேற்கொண்டனர்.

இதன் படி சுமார் 3 ஆயிரத்து 600 வீடுகள் வரை புதிதாக அமைத்து கொடுக்க வேண்டியுள்ளதாகக் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டது.

வீடுகள் முற்றாக சேதம் அடைந்தவர்கள் மற்றும் பகுதி அளவில் சேதம் அடைந்தவர்கள் உள்ளனர். இவர்களுக்கான புதிய வீடுகளை 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபா செலவில் அமைத்து கொடுப்பதாகவும், திருத்து செலவுகளை வழங்குவதாகவும் அரசு அறிவித்திருந்தது.

இதற்கமைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் உமையாள்புரம், முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

You might also like