ஹிஸ்­புல்­லா­வி­டம் 8 மணித்­தி­யா­லம் விசா­ரணை!!

கிழக்கு மாகாண முன்­னாள் ஆளு­நர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லா, பயங்­க­ர­வாத விசா­ர­ணைப் பிரி­வால், எட்டு மணி நேரம் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டார்.

நேற்­றுக் காலை 9.45 மணிக்கு, பயங்­க­ர­வாத விசா­ர­ணைப் பிரி­வில் முன்­னி­லை­யான அவர், மாலை 5.30 மணி­ய­ள­வி­லேயே விசா­ரணை முடிந்து அங்­கி­ருந்து வெளி­யே­றி­னார். அவ­ரி­டம் சுமார் 8 மணி­நே­ரம் விசா­ரணை நடத்­தப்­பட்டு வாக்­கு­மூ­லம் பதிவு செய்­யப்­பட்­ட­தாக, பொலிஸ் பேச்­சா­ளர் ருவன் குண­சே­கர தெரி­வித்­தார்.

கடந்த ஏப்­ரல் 22ஆம் நாள், இரவு 10 மணி­ய­ள­வில், ஊர­டங்­குச் சட்­டம் நடை­மு­றை­யில் இருந்த போது பாசிக்­கு­டா­வில் உள்ள விடு­தி­யொன்­றில் தங்­கி­யி­ருந்த இரண்டு அரே­பி­யர்­களை சர்ச்­சைக்­கு­ரிய வகை­யில் சந்­தித்­தார் என்ற குற்­றச்­சாட்டு தொடர்­பா­கவே ஹிஸ்­புல்­லா­வி­டம் விசா­ர­ணை­கள் நடத்­தப்­பட்­டுள்­ளன.

You might also like