தி­ரு­வள்­ளு­வ­ரை ­உண்­மை­யில் நேசித்­தார் கருணாநிதி!!

பகுதி-25

திரு­வள்­ளு­வ­ரைத் ­தன­து­அ­ர­சி­ய­லுக்­கா­க­மட்­டு­மே­க­லை­ஞர் கரு­ணா­நி­தி­தூக்­கி­வைத்­து­கொண்­டா­ட­வில்லை, மாறா­க­அ­வர்­தி­ரு­வள்­ளு­வ­ரை­உண்­மை­யில் நேசித்­தார்,போற்­றி­னார். தமிழ் மீது­கொண்­ட­பற்­றால்,35 ஆண்­டு­க­ளுக்­கு­முன்பே, ­பர­ப­ரப்­பான­ சென்­னை­மா­ந­க­ரில் திரு­வள்­ளுர் கோட்­டத்­தை­ உ­ரு­வாக்­கி­னார்.

திரு­வள்­ளு­வ­ரது பிறப்பு
மற்­றும் வாழ்க்கை வர­லாற்று
விவ­ரங்­கள் எது­வும் கிடைத்­த­தில்லை
திரு­வள்­ளு­வர்­பற்­றி­ய­த­க­வல்­கள் எவை­யும் தெளி­வா­க­கி­டைக்­க­வில்லை. அவ­ர­து­பி­றப்பு,வாழ்வு­, வர­லாற்­று­கு­றிப்­பு­கள் கிடைக்­க­வில்லை. ஆனால்,அவ­ரது எழுத்­து­அ­வ­ரை­உ­ல­கம் முழு­வ­தும் தெரி­யப்­ப­டுத்­தி­யது.ஒன்­ற­ரை­வ­ரி­யில்1330 குறள்­கள் எழு­தி­ய­வர். ஒவ்­வொரு­ குற­ளும் பல­நீ­தி­களை­ சொல்­லு­கின்­றன. மக்­க­ளுக்கு,ஆட்­சி­செய்­யும் அர­ச­னுக்­கு­எ­ன­எல்­லா­வ­கை­யி­ன­ருக்­கும் ஆலோ­ச­னை­த­ரு­கி­றது.வேதாகமத்துக்கு ­அ­டுத்­த­ப­டி­யா­க­அ­தி­க­மொ­ழி­க­ளில் மொழி­பெ­யர்ப்­புச்­செய்­யப்­பட்ட நூல் திருக்­கு­ற­ளா­கும்.

திருக்­கு­ற­ளில் உள்ள சிறப்­பம்­சங்­க­ளில் ஒன்று­ ஓரி­டத்­தி­லே­னும் கட­வுள் பெயர் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. திரு­வள்­ளு­வர் சம­ண­ம­தத்­தை­சேர்ந்­த­வர்,கட­வுள் நம்­பிக்­கை­ அற்­ற­வர் என்­கின்­ற­னர் ஒரு­சா­ரார்,மற்­றொ­ரு­சா­ரார், திரு­வள்­ளு­வர் சைவ­ச­ம­யத்­தை­சேர்ந்­த­வர் என்­கி­றார்­கள்.கல்­தோன்­றி­மண்­தோன்­றாக் காலத்து­ முன்­தோன்­றிய மூத்த­ குடி­யா­ன­த­மிழ்க் குடி­யின் வர­லாற்றை­ திரு­வள்­ளு ­வர் காலத்­தி­லி­ருந்து­ சில­ ஆய்­வா­ளர்­கள் குறிப்­பி­டு­கி­றார்­கள்.1923ஆம் ஆண்டு­ மறை­ மலை­ய­டி­க­ளார் தலை­மை­யில் பச்­சை­யப்­பன் கல்­லூ­ரி­யில், தமி­ழ­றி­ஞர்­கள் ஒன்­று­கூடி­ தமி­ழர் வர­லாற்­றுத் தொன்­மை­யை­கண்­ட­றிய­ முற்­பட்­ட­னர். இலங்­கி­யங்­கள்,வர­லாற்­று­ஆ­வ­ணங்­களை ஆராய்ந்து இறு­தி­யில் கிறிஸ்து­ பிறப்­ப­தற்கு 31 ஆண்­டு­க­ளுக்கு­ முன்பு­ திரு­வள்­ளு­வர் பிறந்­தார் என­ முடிவு­ செய்­தார்­கள்,அதனை­ அறி­வித்­தார்­கள். அந்த­ அறி­விப்பை­ அடி­யொற்றி 1972ஆம் ஆண்டில் கலை­ஞர் முதல்­வ­ராக இருந்­த­போது­ தமி­ழக­ அரசு ­திரு­வள்­ளுர் ஆண்டை­ அரசு­ உத்­த­ர­வு­க­ளில் கடை­பி­டிக்க­ வேண்­டும் என­ சட்­டம் இயற்றி நடை­மு­றைப்­ப­டுத்­தி­யது.

கலை­ஞர் கரு­ணா­நி­தி­யின் முயற்­சி­யால்
திரு­வள்­ளு­வ­ருக்கு உரு­வம்
கொடுக்­கப்­பட்டது
திரு­வள்­ளு­வ­ரது­ உரு­வம் தெரி­யாது. ஆனால்,கலை­ஞர் கரு­ணா­நி­தி­யின் முயற்­சி­யால் திரு­வள்­ளு­வ­ருக்கு­ உரு­வம் கொடுக்­கப்­பட்­டது ­என­லாம். அத்­தோடு­ உல­கப் பொது­ மறை­யான­ திருக்­கு­றளை ­தந்­த­வள்­ளு­வன் பெய­ரில் ஒரு­ பிர­மாண்­ட­மாக­ மண்­ட­பத்தை­ சென்­னை­யில் அமைத்­தார். சென்னை, கோடம்­பாக்­கத்­தில் இடம் தேர்வு­ செய்து­, வள்­ளு­வர் கோட்­டம் அமைத்­தார்.

தஞ்­சைப்­ பெரிய­ கோயி­லைக் கட்­டிய­ தலை­மைச் சிற்­பி­யின் வழி வந்­த­வர்­கள் எனப்­ப­டும் கண­பதி­ சிற்­பி­யால் கலை­ந­யத்­தோடு­ வள்­ளு­வர் கோட்­டம் உரு­வா­னது. இது­ காந்­தார­ கலை­வ­டி­வில் அமைக்­கப்­பட்­டது. வள்­ளு­வர்­கோட்­டத்­தின் நுழை­வா­யி­லில் திருக்­கு­ற­ளின் முதல் செய்­யு­ளா­ன­அ­க­ர­மு­த­ல­எ­ழுத்­தெல்­லாம்….. என்­ப­து­ப­தி­யப்­பட்­டி­ருக்­கி­றது.

ஆசி­யா­வில் உள்ள
பெரிய அரங்­கு­க­ளில்
ஒன்­றாக வள்­ளு­வர்
கோட்­டம் திகழ்­கி­றது
வள்­ளு­வர் கோட்­டம் ஆசி­யா­வில் உள்ள­ பெரிய­ அரங்­கு­க­ளில் ஒன்­றா­கக் கணிக்­கப்­பட்­டுள்­ளது.220 அடி­ நீளத்­தில், 100 அடி­அ­க­லத்­தில் பிர­மாண்­ட­மான இந்த­ அரங்­கத்­தின் நடுவே­ எங்­கும் தூண்­கள் இருக்­காது. ஒரே­ நேரத்­தில் 4 ஆயி­ரம் பார்­வை­யா­ளர்­கள் அமர்ந்­தி­ருக்க­ முடி­யும்.இந்­தப் பிர­மாண்­ட­மான­ மண்­ட­பத்­தின் மேல்­மை­யத்­தில் உள்ள­ மாடத்தை­ குறள் மாடம் என்று­ குறிப்­பி­டு­கி­றார்­கள். 1330 திருக்­கு­றள்­க­ளும் பளிங்­குக் கல்­லில் செதுக்கி­ வைக்­கப்­பட்­டுள்­ளன. திரு­வள்­ளு­வர் பற்றி 5 புல­வர்­கள் பாடிய­ திரு­வள்­ளுவ­ மாலை­ பாடல்­க­ளும் செதுக்கி­ வைக்­கப்­பட்­டுள்­ளன.

வள்­ளு­வர் கோட்­டத்­தில் பல­ரை­யும்­க­வர்­வது­ திரு­வா­ரூர்க் கோயில் தேரைப் போன்­று­கட்­டப்­பட்­டுள்ள­ சிற்­பத் தேர் அமைப்­பு­ ஆ­கும். இதன் அடிப்­ப­கு­தி­ப­ளிங்­குக் கல்­லால் ஆனது. தேரின் ஒவ்­வொரு­ பக்­கத்­தி­லும் ஒவ்­வொன்­றும் தனிக்­கல்­லில் செதுக்­கப்­பட்ட­ நான்கு­ பெரி­ய­சில்­லு­கள் காணப்­ப­டு­கின்­றன. இந்­தத் தேரில் திரு­வள்­ளு­வ­ரின் சிலை­ வைக்­கப்­பட்­டுள்­ளது. எண்­கோண­ வடி­வில் அமைந்­துள்ள இக் கரு­வறை 40 அடி (12 மீட்­டர்) அக­ல­மா­னது. இந்­தக் கரு­வறை­ வாயி­லில் திரா­வி­டக் கட்­டி­டக்­க­லைப் பாணி­யில் அமைந்த தூண்­கள் அழ­குற­ அமைந்­துள்­ளன.

வள்­ளு­வர் கோட்­டத் ­திறப்பு­ விழா ­ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­ட­போது­, கரு­ணா­நி­தி­யின் ஆட்சி இந்­தி­ரா­காந்தி­ அர­சால் கலைக்­கப்­பட்­டது. அத­னால் வள்­ளு­வர்­கோட்­டத்­தைக்­ கட்­டு­வித்த­ கலை­ஞர் அதன் திறப்­பு­வி­ழா­வுக்கு­ அழைக்­கப்­ப­ட­வில்லை.
அப்­போ­தைய­ குடி­ய­ர­சுத் தலை­வர் பக்­ரு­தின் அலி­ அக­மத் அத­னைத் திறந்து­ வைத்­தார். அப்­போது ‘முதல்­வ­ரா­கத் தான் வள்­ளு­வர் கோட்­டத்­துக்­குள் வரு­வேன்’ என்று ­கலை­ஞர் சப­தம் எடுத்­தார். அதன்­ப­டி­யே­மீண்­டும் 1989ஆம் ஆண்டில் முதல்­வா­ரன கரு­ணா­நிதி ­,­ பத­வி­யேற்பு­ விழாவை ­வள்­ளு­வர் கோட்­டத்­தில் நடத்­தித் தனது­ சப­தத்தை­ நிறைவு­ செய்­தார். வள்­ளு­வர் கோட்­டம் இன்று­ தமி­ழர்­க­ளின் நினை­வுச் சின்­ன­மா­கப் போற்­றப்­ப­டு­கி­றது.

 

(தொட­ரும்)

You might also like