14 ஆண்டுகளின் பின்னர் – பெற்றோரைச் சந்தித்த பெண்!!

14 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது பெற்றோரைச் சந்தித்தார் பெண் கைதி ஒருவர்.

டுபாய் பொலிஸார் கைதிகளுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க முடிவு செய்தனர். நீண்டகாலம் பெற்றோர் அல்லது குடும்பத்தினரை சந்திக்காத கைதிகள் மற்றும் அவர்களுடைய சின்ன, சின்ன ஆசைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 14 ஆண்டுகளாக தனது பெற்றோரைச் சந்திக்கவில்லை.

அதனையடுத்து பெண்ணின் பெற்றோர் டுபாய்க்கு வரவழைக்கப்பட்டனர். பெற்றோர் வந்ததும் அந்த பெண் கைதிக்கு திடீரென்று அழைப்புக் கொடுக்கப்பட்டது.

அவர் வெளியில் வந்தபோது, தனது கண் முன் பெற்றோரைப் பார்த்ததும், இது கனவா அல்லது நிஜமா என்று ஒரு நிமிடம் திகைத்து நின்றார். இதையடுத்து சகஜ நிலைக்கு வந்த அவர் தனது பெற்றோரை கட்டித்தழுவி ஆனந்த கண்ணீர் வடித்தார். தற்போது சிறையில் இருக்கும் அந்தப் பெண் போதை பழக்கத்தில் இருந்து முழுவதுமாக விடுபட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மாற்றங்களை பார்த்தும், ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்து நல்வழிப்படுத்தியமைக்கு பொலிஸாருக்கு பெண்ணின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

You might also like