1,50,000 பேருக்கு- சமுர்த்தி நிவாரணம்!!

குறைந்த வருமானத்தைக் கொண்ட ஒரு இலட்சத்து 50ஆயிரம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்பட்டவுள்ளது.

சமுர்த்தி நிவாரண வேலைத் திட்டத்தின் கீழ் சுமார் 1.38 மில்லியன் பேர் பயன் பெற்று வருகின்றனர்.

எனினும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் இலங்கையில் ஏனைய பிரதேசங்களில் வாழும் குறைந்த வருமானத்தைக்கொண்ட குடும்பங்கள் பலவற்றிற்கு இந்த பயன்கள் கிடைப்பதில்லை என்ற தகவல் பதிவாகியுள்ளது.

சம்பந்தப்பட்ட மாவட்ட செயலர்கள் மற்றும் பிரதேச செயலா்களின் சிபார்சுடன் சமுர்த்தி பயன்கள் கிடைக்க வேண்டிய மேலும் குறைந்த வருமானத்தை கொண்ட 1 இலட்சத்து 50ஆயிரம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணத்தை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக சமூக ஊக்குவிப்பு அமைச்சர் பி. ஹரிசன் சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close