side Add

184 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

மன்னார் – வங்காலை கடற்பகுதியில் வைத்து 1 கோடியே 84 லட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாப் பொதிகளுடன் சந்தேக நபர் நேற்றுக் கைதுசெய்யப்பட்டார்.

பொதி செய்யப்பட்ட நிலையில் 184 கிலோ 200 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சாவைக் கடத்தினார் என்ற குற்றச்சாட்டில் உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் வங்காலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். கஞ்சாப் பொதிகளும் வங்காலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

You might also like