side Add

19ஆவது திருத்­தத்­தின் மீதே பழி­போ­டு­கி­றது மகிந்த அணி

அர­சி­யல் நெருக்­க­டிக்கு அர­ச­மைப்­பின் 19ஆவது திருத்­தச் சட்­டமே கார­ணம். இதற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­ததை எண்ணி இப்­போது கவ­லைப்­ப­டு­கின்­றோம். இவ்­வாறு மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லக்ஸ்­மன் ய◌ாப்பா அபே­வர்த்­தன தெரி­வித்­தார்.

இதே கருத்தை கோத்­த­பாய ராஜ­பக்ச நேற்­று­முன்­தி­னம் தெரி­வித்­தி­ருந்­த◌ார்.
இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில் கொழும்­பில் நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பில் லக்ஸ்­மன் யாப்பா மேலும் தெரி­வித்­த­தா­வது:

நீதி­மன்­றத்­தின் தீர்ப்பை நாம் மதிக்­கின்­றோம். ஆனால் நீதி­மன்­றம் நாடா­ளு­மன்­றம் மற்­றும் நிறை­வேற்­ற­தி­கா­ரம் உள்­ளிட்­ட­வற்றை விட அதி­கா­ரம் மிக்­கது மக்­கள் பலம். மக்­க­ளுக்­கா­கவே இவை மூன்­றும் இயங்­கு­கின்­றன. தேர்­த­லுக்­குச் சென்று மக்­க­ளின் வாக்­கு­க­ளின் மூலம் அதி­கா­ரத்­தைப் பெறு­வதே சிறந்­த­தா­கும்.
225 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் கையெ­ழுத்­திட்டு தந்­தா­லும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை தலைமை அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­போ­வ­தில்லை என்று மைத்­திரி குறிப்­பிட்­டுள்­ளார்.

இவ்­வா­றா­ன­தொரு நெருக்­கடி நிலமை ஏற்­பட்­டுள்­ள­தன் கார­ண­மா­கவே நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­பட்டு பொதுத் தேர்­தல் நடத்­து­வ­தற்­குத் தீர்­மா­னிக்
கப்­பட்­டது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு, மக்­கள் விடு­தலை முன்­னணி மற்­றும் ஐக்­கிய தேசி­யக் கட்சி என்­பன நீதி­மன்­றத்­திற்­குக் கொடுக்­கும் முன்­னு­ரி­ மையை மக்­கள் ஆணைக்கு கொடுக்­க­வில்லை. அவர்­கள் கூறு­வ­தைப் போன்று தேர்­த­லுக்கு அச்­ச­மில்லை என்­றால் தேர்­தலை நடத்தி உட­ன­டி­யாக இந்த பிரச்­சி­னை­ க­ளுக்­குத் தீர்வு காண முடி­யும்.

வர­லாற்­றி­லி­லேயே முதல் முறை­யாக ஐக்­கிய தேசி­யக் கட்சிக்கு மிகப் பெரிய நெருக்­கடி நிலமை தற்­போது ஏற்­பட்­டுள்­ளது. ரணில் விக்­கி­ர­ம­ சிங்­கவை பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­ய­தன் பின்­னர் அந்­தக் கட்­சி­யி­லி­ருந்து இன்­னொ­ரு­வரை பத­விக்­குத் தெரிவு செய்ய முடி­யாத நிலமை காணப்­ப­டு­கின்­றது.

19ஆம் அர­ச­மைப்பு சீர்­தி­ருத்­தத்­துக்கு ஆத­ர­வாக நாமும் வாக்­க­ளித்­துள்­ளோம். அதனை நினைத்து தற்­போது கவ­லை­ய­டை­கின்­றோம். இதில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பாத­க­மான மாற்­றங்­க­ளின் கார­ண­மாக இன்று பொது மக்­களே சிக்­கல்­க­ளுக்கு முகங்­கொ­டுத்து வரு­கின்­ற­னர்.

19 ஆம் திருத்­தத்­தின் ஊடாக மக்­க­ளின் ஜன­நா­ய­கம் பாது­காக்­கப்­ப­டும் என்ற எதிர்­பார்ப்­பி­லேயே நாம் வாக்­க­ளித்­தோம். ஆனால் அது தற்­போது கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. மக்­க­ளின் வாக்­கு­ரிமை மீறப்­பட்டுள்­ளது. அர­ச­மைப்­பின் 19ஆம் திருத்­தத்­தில் மீள­வும் மாற்­றங்­கள் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டும் – என்­றார்.

You might also like