2.0 படத்தின் -முன்னோட்டம்!!

இயக்­கு­நர் ஷங்­கரின் இயக்­கத்­தில் ரஜினி நடித்­துள்ள 2.0 படத்­தின் முன்­னோட்­டக் காணொலி வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கி­றது.

ஷங்­கர்– – ரஜினி கூட்­ட­ணி­யில் பிர­மாண்­ட­மாக உரு­வாகி வரு­கி­றது

2.0 திரைப்­ப­டம். 2010ஆ-ம் ஆண்டு வெளி­யான எந்­தி­ரன் படத்­தின் இரண்­டாம் பாக­மாக உரு­வா­கி­வ­ரும் இந்­தப் படத்­துக்கு உலக அள­வில் எதிர்­பார்ப்­புக் கூடி­யி­ருக்­கி­றது. முழுக்க முழுக்க முப்பரிமாணத்தில் இது பட­மாக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தப் படம், நவம்­பர் 29-ஆம் திகதி வெளி­யா­கும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

2016-ஆம் ஆண்டு தொடங்­கிய படத்­தின் வேலை­கள், தற்­போது இறு­திக் கட்­டத்தை எட்­டி­யி­ருக்­கின்­றன. ஏ.ஆர்.ரஹ்­மான் இசை­ய­மைத்­துள்ள இந்­தப் படத்தை லைகா நிறு­வ­னம் தயா­ரித்­துள்­ளது. உல­கின் பல்­வேறு நாடு­க­ளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்­கும் மேற்­பட்ட கலை­ஞர்­க­ளின் உழைப்­பில் 2.0 படம் உருப்­பெற்­றி­ருக்­கி­றது.

இந்த­ நிலை­யில், படத்­தின்­முன்­னோட்­டக் காணொலி நேற்று முன்­தி­னம் வெளி­யி­டப்­பட்­டது. இந்த படம் ரூ.542 கோடி செல­வில் தயா­ராகி இருப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கி­றது.

You might also like