269 பயணிகளுடன் பயணித்த விமானம்- திடீரென தரையிறக்கப்பட்டது!!

கனடாவின் வான்கூவரில் இருந்து சிட்னி நோக்கி புறப்பட்ட ஏர் கனடா விமானம், திடீர் காற்றுக் கொந்தளிப்பில் சிக்கியதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

திடீர் காற்றுக் கொந்தளிப்பால் குறைந்தது 35 பயணிகள் காயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

வன்கூவரிலிருந்து புறப்பட்ட எயார் கனடா விமானம் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் ஹவாய்க்கு அண்மையில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீர் காற்றழுத்தத்தை உணர்ந்தது. இதனால் விமானம் தனது சம நிலையை இழந்து காற்றில் தத்தழித்தது.

விமானத்தினுள் ஏற்பட்ட சமனற்ற தன்மையினால் ஆசனப் பட்டி அணியாத பயணிகள் விமானக் கூரையுடன் மோதினர். இந்த மோதல்களினாலேயே பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

எனினும் வானோடிகள் குறித்த காற்றுக் கொந்தளிப்பிலிருந்து விமானத்தை மீட்டு ஹவாயின் ஹொனொலுலுவிலுள்ள டானியேல் இனோயுயே சர்வதேச விமானத்தளத்தில் அவசரமாகத் தரையிறக்கினர்.

காயமடைந்த பயணிகளுக்கு ஹொனொலுலுவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

You might also like