28 அடியை எட்டியது இரணைமடுக் குளம்

பிரதிப் பணிப்பாளர் சுதாகரன் தெரிவிப்பு

130

கடந்த இரண்டு வரு­டங்­க­ளின் பின் கிளி­நொச்சி இர­ணை­ம­டு­ கு­ளத்­தில் நீர் அதன் கொள்­­ளளவை அடைந்து வரு­கி­றது என, கிளி­நொச்சி பிராந்­திய பிரதி நீர்ப்­பாச­னத் திணைக்­கள பணிப்­பா­ளர் ந. சுதா­க­ரன் தெரி­வித்­துள்­ளார்.

கடந்த 24 மணி­நே­ரத்­தில் பெய்த 150 மில்லி மீற்­றர் மழை கார­ண­மாக கிளி­நொச்­சி­யில் உள்ள குளங்­க­ளுக்கு நீர் வரத்து அதி­க­ரித்­துள்­ளது. குறிப்­பாக இர­ணை­ம­டுக் ­ கு­ளத்­தின் நீரேந்து பகு­தி­க­ளில் அதி­க­ளவு மழை கார­ண­மாக நேற்றுக் குளத்­தின் நீர் மட்­டம் 28 அடி­யாக உயர்ந்­துள்­ளது.

அவா் மேலும் தெரிவிக்கையில்:

மாங்­கு­ளம், கன­க­ரா­யன்­கு­ளம், சேம­ம­டுக்­கு­ளம் போன்ற குளங்­க­ளின் நீர் மட்­டம் அதி­க­ரித்­துள்­ளது. அந்தக் குளங்­கள் வான்­பாய்­கின்ற போதும் இர­ணை­மடு குளத்­திற்­கான நீர் வரத்து மேலும் அதி­க­ரிக்­கும்.

ஆசிய அபி­வி­ருத்தி வங்­கி­யின் 2 ஆயி­ரம் மில்­லி­யன் ரூபா நிதி ஒதுக்­கீட்­டில் கடந்த இரண்டு அபி­வி­ருத்­திப் பணி­கள் இடம்­பெற்று வந்த நிலை­யி­லும் பருவ மழை போது­மா­ன­தாக இல்­லா­த­தன் கார­ண­மாக கடந்த வரு­டங்­க­ளில் நீர் மட்­டம் அதன் கொள்­ள­ளவை அடை­ய­வில்லை. 2016 ஆம் ஆண்டு நீர் மட்­டம் 20 அடி­யா­க­வும், 2017 ஆம் 18 அடி­யா­க­வும் காணப்­பட்­டது.

இர­ணை­ம­டு­க்கு­ளம் இது­வரை கால­மும் 34 அடி­யாக காணப்­பட்­டது. அபி­வி­ருத்­திக்கு பின் 36 அடி­யாக காணப்­ப­டு­கி­றது. இது­வரை கால­மும் ஒரு இலட்­சத்து ஆறா­யி­ரத்து 500 ஏக்­கர் அடி­யாக (131 எம்.சி.எம்) காணப்­பட்ட நீர் கொள்­ள­ளவு தற்­போது ஒரு இலட்­சத்து 19ஆயி­ரத்து 500 ஏக்­கர் அடி­யாக(147 எம்.சி.எம்) அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வ­ரு­டம் குளத்­தின் நீர் மட்­டம் 36 அடி­யாக உய­ரும் போது குளம் இந்த கொள்ளளவை அடை­யும்.
இன்­ன­மும் வட கீழ் பரு­வ­பெ­யர்ச்சி மழை ஆரம்­பிக்­கப்­ப­ட­வில்லை. தற்­போது இடை­யீட்டுப் பருவப் பெயர்ச்சி மழையே பெய்து வரு­கி­றது. நவம்­பர் மாதம் அதிக மழை­யும், டிெசம்­பர் மாதம் குறை­வான மழை­யும் பெய்­யும் வாய்ப்­புள்­ள­தாக, வானிலை தக­வல்­க­ளும் தெரி­விக்­கின்­றன. இர­ணை­ம­டுக்குளம் இவ்­வ­ரு­டம் 36 அடி நீரை எட்­டும் என்ற மகிழ்ச்­சி­யான நம்­பிக்­கை­யுண்டு.

அவ்­வாறு 36 அடிக்கு நீர் வந்­தால் இது­வரை கால­மும் இர­ணை­ம­டுக்­கு­ளத்­தின் கீழ் சரா­சரி 8ஆயி­ரத்து 500 ஏக்­க­ரில் மேற்­கொள்ளப்பட்டு வந்த சிறு­போக நெற்­செய்கை 12ஆயி­ரத்து 500 ஏக்­க­ராக மாற்­றப்­ப­டும் – என்றார்.

You might also like