3 வயது மகனுக்கு- தந்தை செய்த கொடூரம்– மனதைப் பதறவைத்த கானொளி!!

மனைவியுடன் ஏற்பட்ட தகராற்றில் தனது 3 வயது மகனைத் தந்தை தூக்கி அடிக்கும் காட்சி கானொளியாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. குடிபோதையில் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, 3 வயது மகனை முச்சக்கர வண்டி மீது வேகமாக தூக்கி அடித்துள்ளார்.

இந்த கொடூர தந்தைக்கு எதிராக முறைப்பாடு அளிக்க மனைவி மறுத்து விட்டதாகவும் பொலிஸார் தாமாக முன்வந்து சிறுவர் வன்கொடுமை சட்டத்தில் தந்தை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குற்றவாளி தலைமறைவாகிவிட்டதாகவும் சிறுவன் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நலமுடன் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like