40,000 ஆண்டுகளுக்கு பழமையான ஓநாயின் தலை கண்டுபிடிப்பு!!

ரஷ்யாவின் சிபேரியா பகுதியின் ஆற்றங்கரையில் இருந்து பனி ஓநாய் ஒன்றின் தலையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுடெடுத்துள்ளனர்.

இந்த தலையை வைத்து நடத்திய ஆராய்ச்சியில் அது சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பனி ஓநாய் என்பது தெரியவந்துள்ளது.

பனியில் இருந்ததால் அதன் தலை பகுதி அழுகாமல் உரைந்துள்ளதாக ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை ரஷ்யாவின் ஆர்க்டிக் ரீஜியன் ஆஃப் யகுடியா என்ற அமைப்பு கண்டுபிடித்துள்ளது.

இந்த ஓநாய் வாழ்ந்த காலத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது, மிக நீண்ட தந்தங்களைக் கொண்ட ராட்சத யானைகள் வாழ்ந்த காலகட்டத்தில் இந்த ஓநாயும் வாழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

அக்காலகட்டத்தில் ஏற்பட்ட பேரழிவால் ராட்சத யானைகளுடன் சேர்ந்து, இந்த ஓநாய் இனமும் அழிந்திருக்கலாம் என கணித்துள்ளனர்.

You might also like