720 கிலோ கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது!!

மன்னார் வங்காலை பகுதியில் கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வங்காலை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 720 கிலோ கிராம் கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

You might also like