75 வருடங்களுக்குப் பின்னர் வீதிக்கு பெயர் மாற்றம்!!

75 ஆண்டுகளுக்கு மேலாக வீதி அபிவிருத்தி திணைக்கள பதிவேடுகளில் செம்மணிக்குளம் வீதி என அழைக்கப்பட்ட கல்வியங்காடு வீதி தற்போது புதிய செம்மணி வீதியாக மாற்றப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வீதி அபிவிருத்தி திணைக்களத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக புதிய செம்மணி வீதி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையால் புதிய செம்மணி வீதி என்ற பெயர் பலகையும் பொருத்தப்பட்டுள்ளது.

You might also like