அரசமைப்பு உருவாக்கம் -மேலும் முடங்க வாய்ப்பு!!

ஆயுட்­கா­லம் முடி­வ­டைந்த, முடி­வ­டை­யப் போகின்ற ஆறு மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தல்­கள் இந்த ஆண்­டின் இறு­திக்­குள் நடத்­தப்­ப­டும் என்று அறி­வித்­துள்­ளார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன. தேர்­தல்­களை நடத்த வேண்­டி­யது சன­நா­யக விழு­மி­யங்­க­ளைப் பின்­பற்­றும் அர­சு­க­ளின் தலை­யாய செயற்­பாடு.

அது முதன்­மைக் கட­மை­யும்­கூட. அந்த வகை­யில் தன்னை சன­நா­யக சோச­லி­சக் குடி­ய­ரசு என்று கூறிக்­கொள்­ளும் இலங்­கை­யும் இதற்கு விதி­வி­லக்­கல்ல. அவ்­வாறு விதி­வி­லக்­காக இருந்­து­விட்­டால் அது முறை­யும் அல்ல. அந்த வகை­யில் மைத்­தி­ரி­யி­டம் இருந்து வந்­துள்ள இந்த அறி­விப்பு வர­வேற்­றப்­பட வேண்­டி­யது.

ஆனால் தமி­ழர் தாய­கத்­தின் மிகப்­பெ­ரும் எதிர்­பார்ப்­பில் மண்ணை அள்­ளிப்­போட்­டு­வி­டும் பேரா­பத்­தை­யும் இந்­தத் தேர்­தல்­கள் ஏற்­ப­டுத்­தி­வி­ட­லாம்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன – தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான கூட்டு அரசு சிறு­பான்­மைக் கட்­சி­க­ளு­டன் இணைந்து புதி­ய­தொரு அர­ச­மைப்பை அமைக்­கும் முயற்­சி­யில் தீவி­ர­மாக ஈடு­பட்­டது.

இந்த புதிய அர­ச­மைப்­புக்­கான முயற்­சி­யையே, கடந்த பெப்­ர­வரி மாதம் நடுப்­ப­கு­தி­யில் நடை­பெற்ற உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­ன­வின் சார் பா­கப் போட்­டி­யிட்­ட­வ­ரும், முன்­னாள் அரச தலை­வ­ரு­மான மகிந்த ராஜ­பக்ச தனது தேர்­தல் துருப்­புச் சீட்­டா­கப் பயன்­ப­டுத்­தி­யி­ருந்­தார்.

‘‘நல்­லாட்சி அரசு தமி­ழர்­க­ளுக்கு மட்­டுமே நல்­லாட்சி அர­சாக இருக்­கி­றது’’, ‘‘புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டால் அது தமி­ழர் தாய­கம் உரு­வாக்­கப்­பட வழி­வ­குக்­கும், அவ்­வாறு தமி­ழர்­க­ளுக்கு என்று தனி­நாடு உரு­வா­கு­வ­தற்­கா­கவே பல்­லா­யி­ரக் கணக்­கான எமது சிப்­பாய்­கள் தமது இன்­னு­யிர்­க­ளைத் தியா­கம் செய்­தி­ருந்­த­னர்’’ என்று இனத்­து­வே­சப் பரப்­பு­ரை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தார் அவர்.

மகிந்­த­வின் பரப்­பு­ரை­கள் சிங்­கள மக்­க­ளால் நன்­றா­கவே செவி­யு­றுத்­தப்­பட்­டன. மகிந்­த­வின் இமா­லய வெற்­றியை அடுத்து புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கல் முயற்­சி­கள் கிடப்­பில் போடப்­பட்­டி­ருந்­தன. அமெ­ரிக்கா உள்­ளிட்ட பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் பிர­தி­நி­தி­க­ளுக்­கும், கொழும்பு உயர் மட்­டங்­க­ளுக்­கும் தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பி ன் தலை­வர் இரா.சம்­பந்­தன் கொடுத்த கன­தி­யான அழுத்­தம் கார­ண­மாக புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான ஆவ­ணங்­கள் மீண்­டும் தூசு­தட்­டப்­ப­டக் கூ­டிய சாத்­தி­யக்­கூ­று­கள் இருந்­தன என்­பதை சட்­டென மறுத்­து­விட முடி­யாது.

ஆனால் மீண்­டும் அவை கிடப்­பில் போடப்­பட்டு, புதிய அர­ச­மைப்­புக்­கான உரு­வாக்­கல் பணி­கள் முழு­மை­யாக முடக்­கப்­ப­டுமோ என்­கிற ஏக்­கம் வலுப்­பெ­றவே செய்­கி­றது.

மாகாண சபைத் தேர்­த­லில் ஒவ்­வொரு கட்­சி­யும் தன்­னைப் பலப்­ப­டுத்­தவே கவ­னம் செலுத்­தும். உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தனது வாங்­கு­வங்கி எங்கு சரிந்­தது என்­பதை சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் நன்று பரி­சீ­லனை செய்­து­கொள்­ளும்.

இந்­தப் பரி­சீ­லனை அந்த இரண்டு கட்­சி­க­ளும் சிங்­கள பேரி­ன­வா­தம் என்­பதை மேலும் இறுக்­க­மா­கப் பற்­றிப்­பி­டித்­துக்­கொள்ள வழி­வ­குக்­கும். மட்­டு­மல்­லாது, சேர்ந்துஆட்­சி­ய­மைத்­துள்ள இரண்டு கட்­சி­க­ளும் ஒன்­றின்­மீது ஒன்று தேர்­தல் பரு­வ­கால மோத­லி­லும் ஈடு­ ப­டும்.

அது­தானே அர­சி­யல். அது தவிர்க்­கப்­பட முடி­யா­த­ தும்­கூட. இந்த மோதல்­கள் கூட்டு அர­சுக்­குள் தற்­போ­தி­ருக்­கும் விரி­சலை மேலும் நீட்­சி­பெற வைத்­து­வி­டும். உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின் அவ­தா­ன­மும், அது தந்த படிப்­பி­னை­யும் அதுவே. இத்­த­கைய பின்­ன­ணி­யில் புதிய அர­ச­மைப்பு என்­பது தமி­ழர் தாய­கத்­துக்கு இல­வு­காத்த கிளி­யின் நிலைப்­பா­டாக மாறி­வி­டவே அதிக சாத்­தி­யங்­கள் உள்­ளன.

ஆக, இலங்கை அர­சி­ய­லில் எதிர்­கால ‘அர­சி­யல்’ நிரல்­க­ளை­யும், தமி­ழர் தாய­கத்­தின் கோரிக்­கை­க­ளும் ஒரு­சேர ஆராய்ந்து, அவை எந்த அள­வுக்­குச் சாத்­தி­யம், அடுத்­துச் செய்­ய­வேண்­யது என்ன என்­பது தொடர்­பில் தமிழ் மக்­க­ளின் பிர­தி­நி­கள் காய் நகர்த்த வேண்­டும். தமி­ழர்­தா­ய­கத்­தில் எதிர்­பார்ப்­பும்­கூட அது­வா­கத்­தான் உள்­ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close