side Add

அரச தலை­வ­ராக வரு­ப­வ­ருக்கு மன­நோய் சோதனை வேண்­டும்

சரத் பொன்­சேகா வலி­யு­றுத்து

நான் அரச தலை­வ­ரா­கி­யி­ருந்­தால் அரச பணத்­தில் வெளி­நா­டு­க­ளுக்­குச் சுற்­றுலா செல்­லவோ, காலை­யில் ஒன்­றை­யும் மாலை­யில் ஒன்­றை­யும் கதைக்­க­வேமாட்­டேன். ‘‘கூலிங் கிளாஸ்” அணிந்து கொண்டு நீர்த் தேக்­கத்தி­ லிருந்து ஒளிப்­ப­டம் எடுத்­தி­ருக்­க­மாட்­டேன்.  யாரோ ஒரு மகள் தந்­தைக்கு எழு­திய புத்­த­கத்தை நான் சொந்­தம் கொண்­டா­டி­யி­ருக்க மாட்­டேன். அமெ­ரிக்­கா­வில் அரச தலை­வ­ருக்­கும் மன­நோய் பரி­சோ­தனை செய்­யப்­ப­டும். அதே­போல் இலங்­கை­யி­லும் கொண்­டு­வர வேண்­டும். இவ்­வாறு பீல்ட் மார்­ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­றுப் புதன்­கி­ழமை இடம்­பெற்ற விவா­தத்­தில் பங்­கேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

கட்­சித் தலை­வர்­கள் கூட்­டத்­தில் என்­னைப்­பற்றி விமர்­ச­னங்­களை முன்­வைத்­துள்­ளார். நான் கடந்த 2010ஆம் ஆண்டு அரச தலை­வர் தேர்­த­லில் வெற்றி பெற்­றி­ருந்­தால் கட்­சித்­த­லை­வர்­கள் எவ­ரை­யும்  வர­வ­ழைத்து பேசக்­கூட இட­ம­ளித்­தி­ருக்க மாட்­டேன் என்று கூறி­யுள்­ளார். ஆனால் கடந்த 2010 ஆம் ஆண்டு தேர்­த­லில் உண்­மை­யில் யார் வெற்றி பெற்­றது என்­ப­தற்­கான ஆதா­ரங்­கள் உள்­ளன. அப்­போ­தைய அரச தலை­வர் மகிந்த தனது அடி­யாள்­களை கொண்டு தேர்­தலை தன் பக்­கம் திருப்­பி­ய­மை­யான ஆதா­ரங்­கள் உள்­ளன.

2010 ஆம் ஆண்டு தேர்­த­லில் நான் வெற்­றி­பெற்­றது உறு­தி­யாக்­கப்­பட்­டி­ருந்­தால் நான் இப்­போது அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன செயற்­ப­டு­வது போல கீழ்த்­த­ர­மா­கச் செயற்­பட்­டி­ருக்க மாட்­டேன். அர­ச­மைப்பை மீறி செயற்­பட்­டி­ருக்க மாட்­டேன். ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் ஆத­ர­வில் வெற்­றி­பெற்று எதி­ர­ணி­யில் போய்  அமர்ந்­து­கொண்டு என்னை அதி­கா­ரத்­துக்கு கொண்­டு­வந்த நப­ரது காலை­வா­ரும்  செய­லைச் செய்­தி­ருக்க மாட்­டேன். ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் ஆத­ர­வில் ஆட்­சியை அமைத்­தி­ருந்­தால் இறு­தி­வரை  ஐக்­கிய தேசி­யக் கட்­சியை பலப்­ப­டுத்தி ஆட்­சியை கொண்டு நடத்­தி­யி­ருப்­பேன். தேர்­தல்­க­ளில்  தோற்­ற­வரை மீண்­டும் தலைமை அமைச்­ச­ராக நிய­மித்­தி­ருக்க மாட்­டேன்.

இரண்டு வாரங்­க­ளுக்கு ஒரு­முறை அரச நிதி­யில் வெளி­நா­டு­க­ளுக்­குச் சென்று ஊர் சுத்­தி­யி­ருக்க மாட்­டேன். நான் இரண்­டரை ஆண்­டு­கள் அமைச்­சுப் பத­வி­யில் இருந்­துள்­ளேன். இந்­தக் காலத்­தில் நான் அரச நிதி­யில் ஒரு சந்­தர்ப்­பத்­தில் கூட வெளி­நாட்­டுப் பய­ணத்தை மேற்­கொண்­ட­தில்லை. அரச நிதியை நான் ஒரு­போ­தும் நாச­மாக்­கி­யி­ருக்க மாட்­டேன்.

காலை­யில் ஒரு கதை­யும் பகல் வேறு கதை­யும் இர­வில் இன்­னொரு கதை­யு­மா­கக் கதைத்து நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்க மாட்­டேன். ஒரே வாக்­கு­று­தி­யில் செயற்­பட்­டி­ருப்­பேன். அதே­போல் வேறு ஒரு­வர் எழு­திய புத்­த­கத்­துக்கு எனது மக­ளின் பெய­ரைச் சூட்டி “அரச தலை­வ­ரின் தந்தை” என்று புத்­த­கம் எழு­தி­யி­ருக்க மாட்­டேன். யாரோ ஒரு மகள் தனது தந்­தைக்கு எழு­திய புத்­த­கத்தை நான் சொந்­தம்­கொண்­டா­டி­யி­ருக்க மாட்­டேன்.

எனக்கு உயிர் அச்­சு­றுத்­தல் என்று தெரு­வில் காணும் அனை­வ­ரி­ட­மும் பொய்­யா­கக் கற்­பனை செய்­து­கொண்டு கூறி­யி­ருக்க மாட்­டேன். எனக்கு உயிர் அச்­சம் ஒரு­போ­தும் இல்லை. உயிர் அச்­சு­றுத்­தல் இருப்­ப­தாக நினைத்­துக்­கொள்­வ­தும் ஒரு மன­நோய். அதி­கா­ரத்தை தக்­க­வைக்க வேண்­டும் என்­ப­தற்­காக எவ­ரை­யும் விலை­கொ­டுத்து வாங்க நினைத்­தி­ருக்க மாட்­டேன். ஊழல் என்­பதை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் முதற்­கொண்டு அரச தலை­வர் வரை அனை­வ­ரும் தடுக்க வேண்­டும் என்­பதே எனது நிலைப்­பாடு. மொர­கா­கந்த போன்ற நீர்த்­தேக்­கங்­களை உரு­வாக்­கி­விட்டு அங்கு சென்று ஒளிப்­ப­டங்­களை எடுத்து நடித்­துக்­கொண்டு இருக்க மாட்­டேன். இப்­போது அந்த வயதை நாம் கடந்­து­விட்­டோம்.

அமெ­ரிக்க போன்ற நாடு­க­ளில் அரச தலை­வர் உள்­ளிட்டு உயர் அதி­கா­ரி­கள், பாது­காப்பு அதி­கா­ரி­கள் அனை­வ­ரும் வரு­டத்­துக்கு ஒரு­முறை மன­நி­லைப் பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும். பாது­காப்பு அதி­கா­ரி­கள் மற்­றும் தலை­வர் அதி­க­மாக ஆயு­தங்­க­ளு­டன், இர­க­சி­யக் களஞ்­சிய சாவி­க­ளு­டன் வாழ்­வ­த­னால் அவர்­க­ளின்  மன­நிலை பாதிக்­கப்­ப­டக்­கூ­டாது என்ற கார­ணத்­துக்­காக இவ்­வாறு செய்­வார்­கள். அதிஷ்­ட­வ­ச­மாக எமது நாட்­டில் ஆயுத களஞ்­சிய சாவி­கள் அரச தலை­வ­ரி­டம் இல்லை. அவ்­வ◌ாறு இருந்­தி­ருந்­தால் முத­லில் எனது பக்­கமே ஆயு­தங்­கள் திரும்­பி­யி­ருக்­கும். எவ்­வாறு இருப்­பி­னும் இங்­கும் அரச தலை­வர்­கள் தமது மன­நி­லையைg; பரி­சோ­தனை செய்ய வேண்­டும் என்ற கட்­டாய விதி ஒன்று அர­ச­மைப்­பில் உள்­வாங்­கப்­பட வேண்­டும். சபா­நா­ய­கர் தலை­யிட்­டே­னும் அவ்­வா­றான ஒரு நட­வ­டிக்­கை­யைக் கொண்­டு­வர வேண்­டும் என்­றார்.

You might also like