அலைபேசிகள், ஆடம்பரக் கார்களுக்குத் தடை!!

0 13

அலை­பே­சி­கள், ஆடம்­ப­ரக் கார்­க­ளுக்­குத் தடை விதிப்­ப­தற்­குப் இம்­ரான்­கான் தலை­மை­யி­லான பாகிஸ்­தா­னின் புதிய அரசு முடிவு செய்­துள்­ள­தா­கத் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

பாகிஸ்­தா­னில் நடை­பெற்ற தேர்­த­லில் முன்­னாள் கிரிக்­கெட் வீரர் இம்­ரான் கான் தலை­மை­யி­லான பி.டி.ஐ. கட்­சி அமோக வெற்றி பெற்று தனிப்­பெ­ரும் கட்­சி­யாக ஆட்­சி­யை­மைத்­தி­ருக்­கி­றது.

இதைத் தொடர்ந்து அந்­தக் கட்­சி­யின் தலை­வர் இம்­ரான்­கான் பாகிஸ்­தா­னின் தலைமை அமைச்­ச­ரா­கப் பதவி ஏற்­றார். பதவி ஏற்­றது முதல் அவர் பாகிஸ்­தா­னின் பல பொரு­ளா­தார சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­க­ளி­லும் ஆர்­வம் செலுத்தி வரு­கி­றார்.

கடந்த வாரம் அந்த நாட்­டின் இரா­ணுவ அணி வகுப்பு ஒன்­றின்­போது உரை­யாற்­றிய அவர் ‘‘பாகிஸ்­தான் இனி எந்த நாட்­டு­ட­னும் போரி­டாது’’ என்­றும் ‘‘மக்­க­ளின் முன்­னேற்­றத்­தில் கவ­னம் செலுத்­தும் என்­றும் தெரி­வி­வித்­தி­ருந்­தார்.

இந்த நிலை­யில்­தான் பாகிஸ்­தா­னில் பொரு­ளா­தார நெருக்­க­டி­யைச் சமா­ளிப்­ப­தற்கு அலை­பே­சி­கள் மற்­றும் ஆடம்­ப­ரக் கார்­க­ளின் இறக்­கு­ம­தி­க­ளுக்­குத் தடை­வி­திப்­ப­தற்­கு­ இம்­ரான் கான் தலை­மை­யி­லான அரசு ஆலோ­சித்து வரு­வ­தாகத் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

இது தொடர்­பாக பாகிஸ்­தான் அர­சின் பொரு­ளா­தா­ரக் குழு இம்­ரான்­கா­னி­டம் ஆலோ­ச­னை­யில் ஈடு­பட்­ட­தா­க­வும், இதற்கு அவர் சம்­ம­தம் தெரி­வித்­துள்­ள­தா­க­வும் ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

அலை­பே­சி­கள் மற்­றும் ஆடம்­ப­ரக் கார்­கள் போன்ற பொருள்­க­ளின் இறக்­கு­ம­தி­யைத் தடை செய்­வ­தன் மூலம் ரூ.33ஆயி­ரம் கோடி­வ­ரை­யில் பொரு­ளா­தாரப் பற்­றாக்­கு­றை­யைச் சீர்­செய்ய முடி­யும் என்று பாகிஸ்­தான் கணக்­கிட்­டுள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கி­றது.

You might also like