side Add

அவசர நோயாளர்களை இடமாற்ற- இந்திய அம்புலன்ஸ்!!

இந்திய அரசினால் வழங்கப்பட்ட நோயாளர் காவு வண்டிகள் நோயாளர்களை இடம் மாற்றவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

விபத்து,நெஞ்சு வலி,பிரசவம் ,நஞ்சருந்தல் ,விசப் பூச்சிகள் கடி போன்ற பல்வேறு தேவைகளுக்கும் அவரச நோயாளர் காவு வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

இந்த நிலையில் மருத்துவ மனைகளுக்கு இடையே நோயாளர்களை மாற்றம் செய்வதற்கு வண்டிகள் போதுமானதாக இல்லை.

கடந்த வருடம் ஜூலை மாதம் 20 நோயாளர் காவு வண்டிகளை இந்திய அரசு வழங்கியது.

இவை அவரச சேவையில் மட்டும் ஈடுபடுத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில் அவரச சேவையில் ஈடுபட்ட வண்டிகள் மருத்துவ மனைகளுக்கு இடையே நோயாளர்களை மாற்றம் செய்தல் உள்ளிட்ட தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

You might also like