இந்த உயிர் இங்கே போனால் என்ன?- கடல் கடந்து அங்கே போய்ப் போனால் என்ன?

0 97

பகுதி-51

இலங்­கை­யில் தமி­ழ­ருக்­கெ­தி­ரான போரை நிறுத்து’ என்ற கோரிக்­கையை முன்­வைத்­துத் தமி­ழ­கம் 2008ஆம் ஆண்­டி­லி­ருந்து போராட்­டக் கள­மா­னது. அதன் உச்­ச­மாக முத்­துக்­கு­மா­ரின் தீக்­கு­ளிப்பு அமைந்­தி­ருந்­தது என்­ப­தைப் பார்த்­தோம். அப்­போது தமி­ழக அர­சின் சார்­பில் முத­ல­மைச்­சர் கரு­ணா­நிதி, டெல்­லிக்­குக் கடி­தம் மேல் கடி­தம் அனுப்­பி­னார். இலங்கை விட­யத்­தில் தலை­யிட்­டுத் தமி­ழ­ருக்­கெ­தி­ரான போரை நிறுத்த வேண்­டு­மென்று கேட்­டுக் கொண்­டார். அந்­தக் கடி­தங்­க­ளால் பய­னே­தும் நிக­ழ­வில்லை. இந்த வேளை, ‘‘இனிக் கலை­ஞர் இலங்­கைப் பிரச்­சினை தொடர்­பாக டில்­லிக்கு ‘மிஸ்­கோல்’ போட்­டேன் என்று அறி­விப்­பார்’’ என்­று­கூ­றிப் போராட்­டத்­தில் ஈடு­பட்ட மாண­வர்­கள் கிண்­ட­ல­டித்­தார்­கள்.

இந்­திய கம்­யூ­னிஸ்ட்
கட்­சி­யின் போராட்­டம்
தமி­ழ­கத்­தில் ஈழப்­போ­ராட்­டத்­தைத் தீவி­ரப்­ப­டுத்­தி­யது 2008ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் இந்­தி­யா­வின் ஹைத­ரா­பாத் மாநி­லத்­தில் கூடிய இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் தேசி­யக் குழு. இலங்­கை­யில் போர் நிறுத்­தம் கோரித் தமி­ழ­கம் முழு­வ­தும் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை நடத்­து­வது என முடி­வு­செய்­தார்­கள். இந்­தத் தீர்­மா­னம் இந்­தி­யத் தேசிய அள­வில் சல­னங்­களை உண்­டாக்­கி­யது. இந்த முடி­வுக்­குத் தமி­ழ­கம் முழு­வ­தும் அமோக ஆத­ரவு கிடைத்­தது.

தி.மு.காவின் கூட்­ட­மும் ஏனைய
கட்­சி­க­ளின் புறக்­க­ணிப்­பும்
இதைத் தொடர்ந்து, தி.மு.க சார்­பில் சென்­னை­யில் பொதுக்­கூட்­டம் நடத்­தப்­பட்­டது. அதில் ‘‘இலங்­கை­யில் நம் சகோ­த­ரர்­கள் செத்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். இந்த உயிர் இங்கே போனால் என்ன, கடல் கடந்து அங்கே போய்ப் போனால் என்ன? போர்­நி­றுத்­தம் கொண்­டு­வர இலங்கை அரசை மத்­திய அரசு நிர்ப்­பந்­திக்க வேண்­டும். இல்­லை­யென்­றால் இனி­யும் இந்­தப் பதவி எதற்கு என யோசிக்க வேண்டி இருக்­கும்’’ என்று கரு­ணா­நிதி, மத்­தி­ய­ரசை அந்­தக் கூட்­டத்­தில் எச்­ச­ரித்­தார்.

‘‘இலங்­கை­யில் இனப்­ப­டு­கொ­லைக்கு இந்­திய அரசு உதவி செய்­கி­றது’’ எனத் தமி­ழ­கத் தலை­வர்­கள் பகி­ரங்­க­மாக இந்­திய மத்­திய அர­சைக் குற்­றம்­சாட்­டி­னர். இதே கால­கட்­டத்­தில கரு­ணா­நிதி தலை­மைச் செய­ல­கத்­தில் அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்­தைக் கூட்­டி­னார். அ.தி.மு. க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க. ஆகிய கட்­சி­கள் அந்­தக் கூட்­டத்­தைப் புறக்­க­ணித்­தன.

பதவி வில­கு­வ­தான தீர்­மா­ன­மும்
அது நீர்த்­துப்­போ­ன­மை­யும்
‘‘இரண்டு வாரங்­க­ளுக்­குள் மத்­திய அரசு போரை நிறுத்த முய­லா­விட்­டால் தமி­ழக அமைச்­சர்­கள் அனை­வ­ரும் பத­வி­வி­ல­கு­வார்­கள்’என்று இந்­தக் கூட்­டத்­தில் தீர்­மா­னம் நிறை­ வேற்­றப்­பட்­டது. அதை­ய­டுத்து, டெல்­லிக்குச் சென்ற பசில் ராஜ­பக்­ச­வு­டன் பேச்சு நடத்­திய அப்­போ­தைய இந்­திய அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் பிர­ணாப் முகர்ஜி, சென்­னைக்­குச் சென்று முத­ல­மைச்­சர் கரு­ணா­நி­தி­யைச் சந்­தித்­துப் பேசி­னார். அதை­ய­டுத்து, ‘‘பதவி வில­கல் மூலம் மத்­திய அர­சுக்கு நெருக்­கடி வழங்­கப்­போ­வ­தில்லை’’ என்­றார் கரு­ணா­நிதி.

போராட்­டங்­க­ளும் போர்­நி­றுத்­தம்
செய்­யக்­கோ­ரிய தீர்­மா­ன­மும்
2008ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் வகுப்­புப் புறக்­க­ணிப்­புப் போராட்­டம், ராமேஸ்­வ­ரத்­தில் திரை­யு­ல­கி­னர் திரண்டு போராட்­டம், விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சி­யின் ரயில் மறி­யல் போராட்­டம் என்று ஈழத்­த­மி­ழ­ரைக் காப்­பாற்­று­வ­தற்கா­கத் தமி­ழ­கம் போராட்­டக் கள­மா­கி­யது. இதே­வேளை காங்­கி­ரஸ் கட்சி ‘இறை­யாண்­மைக்கு எதி­ரா­கப் பேசு­கின்­ற­னர்’ எனத் தமி­ழ­கச் சட்­டப்­பே­ர­வை­யில் பிரச்­சினை எழுப்­பி­யது. போர்­நி­றுத்­தக் கோரிக்­கையை வலி­யு­றுத்­திய போராட்­டங்­கள் தீவி­ரம் ஆகிக்­கொண்டே இருக்க, முத­ல­மைச்­ச­ராக இருந்த கரு­ணா­நி­திக்கு நெருக்­கடி ஏற்­பட்­டது. அத­னால் சென்­னை­யில் தி.மு.க. சார்­பில் மனி­தச் சங்­கி­லிப் போராட்­டம் நடத்­தப்­பட்­டது. பின்­னர் கரு­ணா­நிதி போர்­நி­றுத்­தத்தை வலி­யு­றுத்திச் சட்­டப்­பே­ர­வை­யில் தீர்­மா­னம் நிறை­வேற்­றி­னார்.

இதன் பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­தார் கரு­ணா­நிதி அப்­போது செய்­தி­யா­ளர் ஒரு­வர், ‘‘இலங்­கைத் தமி­ழர்­க­ளுக்­காக அனைத்­துக் கட்­சிக் கூட்­டம் போட்டு சிறப்­புத் தீர்­மா­னம் நிறை­வேற்றி அனுப்­பி­னீர்­கள், நிதி வசூ­லித்­துக் கொடுத்­தீர்­கள், விரைவு நட­வ­டிக்­கை­கள் எடுத்­தீர்­கள்.ஆனால் நீங்­கள் பதவி விலக வேண்­டும் என எதிர்க்­கட்­சித் தலை­வர் ஜெய­ல­லிதா திரும்­பத் திரும்பச் சொல்லி வரு­கி­றாரே?’’ என்று கேட்­டார். அதற்­குக் கரு­ணா­நிதி சொன்­னார், ‘‘என் மீதுள்ள அனு­தா­ப­மும் பரி­தா­ப­முமே கார­ணம். கடந்த 50 ஆண்­டு­க­ளுக்கு மேலாக இலங்­கைப் பிரச்­சி­னைக்­கா­கக் கஸ்­ரப்­ப­டு­கி­றாரே முதல்­வர் என்­ப­தற்­கா­க­கத் தான் அப்­ப­டிக் கூறு­கி­றார்’’ என்­றார். தொடர்ந்து 2008ஆம் ஆண்டு டிசம்­பர் மாதம் நான்­காம் திகதி தமி­ழ­கத் தலை­வர்­க­ளு­டன் இந்­தி­யத் தலைமை அமைச்­சர் மன்­மோ­கன் சிங்­கைச் சந்­தித்­தார் கரு­ணா­நிதி.

கிளி­நொச்சி நகர் இரா­ணு­வத்­தால் முற்­று­கை­யி­டப்­பட்­டது
இதே­வேளை 2008ஆம் ஆண்டு டிசம்­ப­ரில் கிளி­நொச்சி நகர் இலங்கை இரா­ணு­வத்­தால் கைப்­பற்­றப்­ப­டு­கி­றது. கன­ரக ஆயு­தங்­கள் மூலம் ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் கொத்­துக்­கொத்­தா­கக் கொல்­லப்­பட்­ட­னர். போரை நிறுத்­து­மாறு மத்­திய, மாநில அர­சு­களை வலி­யு­றுத்­தித் தமி­ழ­கத்­தில் நாளுக்கு நாள் போராட்­டம் வலுத்­தது. ‘இலங்­கைத் தமி­ழர் பாது­காப்பு இயக்­கம்’ உரு­வாக்­கப்­பட்­டது.

இந்­தப் பின்­ன­ணி­யில் தான் 2009ஆம் ஆண்டு ஜன­வரி 29ஆம் திகதி சென்னை–நுங்­கம்­பாக்­க த்­தில் முத்­துக்­கு­மார் தீக்கு­ளித்­துச் சாவ­டைந்­தார். இந்த நிலை­யில், கரு­ணா­நிதி, 2009ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் மூன்­றாம் திகதி தி.மு.காவின் சார்­பில் ‘இலங்­கைத் தமி­ழர் நல உரி­மைப் பேரவை’ எனும் புதிய அமைப்பை உரு­வாக்­கி­னார். ‘‘இலங்­கைப் பிரச்சினைக்­கா­கப் போரா­டு­வ­தா­கக் கூறி, என் ஆட்­சி­யைக் கவிழ்க்­கச் சதி…. இந்­தப் பேரவை நடத்­தும் நிகழ்ச்­சி­க­ளில் யாரு­டைய மன­தை­யும் புண்­ப­டுத்­தாத முழக்­கங்­கள் இருக்­க­வேண்­டும்’’ என்று அவர் கூறி­யது, முக்­கி­யத்­து­வம் பெற்­றது.
(தொட­ரும்)

You might also like