இன்னொரு பிரபாகரனை உருவாக்க வேண்டாம்- முல்லைத்தீவில் ஜனாதிபதி!!

ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் முஸ்லிம் பிரபாகரனை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டது. வடக்கில் தோன்றிய ஒரு பிரபாகரனாலேயே நாம் பெரும் பிரச்சனைகளை சந்தித்தோம். இன்னொரு பிரபாகரன் எமக்கு வேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாட்டுக்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சியின் இறுதிநாள் நிகழ்வு முல்லைத்தீவில் இன்று இடம்பெற்றது. அதில் அவர் தெரிவித்ததாவது,

முல்லைத்தீவில் மட்டுமல்ல, வடக்கிலும் பல பிரச்சழனைகள் உள்ளன. அவற்றில் ஒன்று வறுமை. மொழி, மதம், இனம், சாதி அடிப்படையில் பிரிந்துள்ளோம். நாம் ஒன்றாக இல்லை. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல பிரதான சவால் அது. இதனால் தான் நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற திட்டத்தை உருவாக்கினோம்.

இந்த வருட இறுதியில் தேர்தல் வரவுள்ளது. அதை இலக்காக வைத்து பலர் வேலை செய்கிறார்கள். அதனால் நாடு பிரிந்துள்ளது. தவறாக செயற்படுபவர்களை நிராகரிக்க வேண்டும். ஏப்ரல் 21 குண்டு வெடிப்பின் பின்னர் 300 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இனங்களுக்கு இடையில் பிளவு அதிகரித்துள்ளது. என்றார்.

You might also like