உணவு ஒவ்வாமை- 30 பணியாளர்கள் மருத்துவமனையில்!!

உணவு ஒவ்வாமை காரணமாக ஆடைத்தொழிற்சாலையில்  பணியாற்றிய சுமார் 300 பணியாளர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் மினுவாங்கொட பிரதேசத்தில் இன்று காலை நடந்துள்ளது.

வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பணியாளர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

150 க்கும் அதிக பணியாளர்கள் கம்பஹா மாவட்ட மருத்துவமனையிலும், சுமார் 135 பேர் வரை மினுவாங்கொட மாவட்ட மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், மேலும் சிலர் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like