உயிரிழந்த மீனவர்களுக்கு நட்டஈடு

0 96

தெய்வேந்திரமுனை கடற்பரப்பில் உயிரிழந்த மீனவர்கள் இருவரினது குடும்பத்திற்கும் நட்டஈட்டை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்​தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கடற்தொழில் அமைச்சின் செயலாளர் ஜகத்.பீ.விஜேவீரவுக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர  அறிவுறுத்தியுள்ளார்.

நேற்று  இடம்பெற்ற படகுவிபத்தில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு 10 இலட்ச ரூபாய் நட்டஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டடுள்ளது.

மீனவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசிலையும், குடும்ப நடவடிக்கைகளுக்காக மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.ரி2

You might also like