ஊடகங்களை வெளியேறப் பணித்தார் ஆளுநர்- எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு!!

முல்லைத்தீவு மாவட்டச் செயலக அபிவிருத்துக்குழுக் கூட்டத்தில் இருந்து தனியார் ஊடகங்களை வெளியேறுமாறு வடக்கு மாகாண ஆளுநர் பணித்தமையால், அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனால் கூட்டத்தில் குழப்ப நிலமை ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் , நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இதன் போது ஊடகவியலாளர்களை அவதானித்த ஆளுநர், தனியார் ஊடகங்களை வெளியேறுமாறும், அரச ஊடகங்களை மட்டும் இருக்குமாறும் கேட்டுகொண்டார்.

இதன் போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஊடகங்கள் இருக்க வேண்டியதன் அவசியத்தைக் கூறினர். எனினும் ஆளுநர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் சிறிதுநேரம் அமளிதுமளி ஏற்பட்டது .

நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதங்களையடுத்து ஊடககங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like