எமனான துப்பட்டா- 15 வருடங்களின் பின் தாயானவருக்கு நேர்ந்த சோகம்!!

வான் கதவில் துப்பட்டா சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரளா மாநிலம் நெய்யாற்றின் கரையை அடுத்துள்ள உதயன்குளங்கரை பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தம்பதியினர் ரவி(45) – மஞ்சு(40). இவர்களுக்கு திருமணமாகி 15 வருடங்களாகியும் குழந்தை இல்லாமல், தற்போது தான் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மஞ்சு, திற்பரப்பு பகுதியில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டுக்குச் சென்றார். தொடர்ந்து, தனது சொந்த ஊரான குழித்துறைக்கு வானில் சென்றார். பின்னர், குழித்துறையில் வீட்டின் அருகே வானில் இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது துப்பட்டா வான் கதவல் சிக்கிக் கொண்டது. இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட மஞ்சு, துப்பட்டாவைப் பிடித்து இழுத்தார்.

ஆனால், மஞ்சுவின் நிலமையை அறியாத சாரதி வானை ஓட்டத் தொடங்கினார். துப்பட்டா வான் கதவில் மாட்டிக் கொண்டதால், மஞ்சு நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த அடிபட்டது. உடனே அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு, குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.

தொடர்ந்து மஞ்சுவைப் பரிசோதித்த குழித்துறை மருத்துவமனை மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர். வான் கதவில் துப்பட்டா சிக்கி மஞ்சு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close