எல்லே தொடரில் – இரண்டு அணிகளுக்குக் கிண்ணம்!!

மன்னார் மடு பிரதேச செயலர் பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டு விழாவின் ஒர் அங்கமான ஆண்களுக்கான எல்லே தொடரில் கல்மடு விளையாட்டுக்கழக அணியும், பெண்களுக்கான எல்லே தொடரில் தட்சனாமருதமடு ஜக்கிய விளையாட்டுக்கழக அணியும் கிண்ணம் வென்றது.

கடந்த சனிக்கிழமை பூமலந்தான் பீனிக்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில் முதலில் இடம் பெற்ற ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் கல்மடு விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து பூமலந்தான் பீனிக்ஸ் விளையாட்டுக்கழக அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கல்மடு விளையாட்டுக்கழக அணி 30 பந்துகளில் 5 ஓட்டங்களைப் பெற்றது.

6 ஓட்டங்கள் பெற்றால் வெற்றியென பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பூமலந்தான் பீனிக்ஸ் விளையாட்டுக்கழக அணி 30 பந்துகளி 3 ஓட்டங்களை மட்டும் பெற்றது.

தொடர்த்து இடம் பெற்ற பெண்களுக்கான இறுதியாட்டத்தில் தட்சனாமருதமடு ஜக்கிய விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து பெரிய பண்டிவிரிச்சான் வள்ளுவர் விளையாட்டுக்கழக அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பண்டிவிரிச்சான் வள்ளுவர் விளையாட்டுக்கழக அணி 30 பந்துகளில் ஒர் ஓட்டங்களைப்பெற்றது.

2 ஓட்டங்கள் பெற்றால் வெற்றியென பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தட்சனாமருதமடு ஜக்கிய விளையாட்டுக்கழக அணி 30 பந்துகளி 2 ஓட்டங்களைப் பெற்றது.

You might also like