side Add

ஒளிப்படத்தால் கோபமடைந்த பிக்கு!!

மடக்களப்பில் அமைந்துள்ள ஸ்ருடியோ கடை ஒன்றுக்குள், காவியுடைதரித்த பிக்கு ஒருவர் புகுந்து உரத்த சத்தமிட்டு அட்டகாசம் செய்துள்ளார்.

ஸ்ருடியோ கடையினுள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த குழந்தை ஒன்றின் ஒளிப்ப்படத்தை காட்டி இது யாருடையது? எனது சிறிய வயது ஒளிப்படம் இதை ஏன் நீங்கள் காட்சிப்படுத்த வேண்டும், இதற்கு விலை 125 ரூபாயா? நான் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு போகப்போகிறேன் என்று கடையில் வேலை செய்யும் ஊழியர்களை அச்சுறுத்தினார்.

காவியுடை தரித்து வந்தவர் உண்மையில் பிக்கு போன்று நடந்து கொள்வில்லை என்று ஸ்ரூடியோ கடையில் தொழில் புரியும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

119 என்ற இலக்க பொலிஸ் அவசர பிரிவுக்கு குறித்த கடை ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.பொலிஸார் வருவதற்கு முன்னர் பிக்கு அங்கிருந்து சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like