side Add

கடை­க­ளில் புகைப்­பொ­ருள் விற்க ஜன­வரி மாதம் முதல் கட்­டுப்­பாடு

சாவ­கச்­சேரி பிரதேச சபை தீர்­மா­னம்

சாவ­கச்­சேரி பிர­தேச சபை எல்­லைக்­குட்­பட்ட பகுதி வர்த்­தக நிலை­யங்­க­ளில் ஜன­வரி முத­லாம் திகதி தொடக்­கம் புகை­யி­லை­சார் உற்­பத்­திப் பொருள்­கள் விற்­பனை செய்­வ­தற்­குக் கட்­டுப்­பா­டு­கள் வர­வுள்­ளது.

பிர­தேச சபையின் அமர்வு நேற்று நடை­பெற்ற போது இந்­தத் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது என தவி­சா­ளர் க.வாம­தே­வன் தெரி­வித்­தார்.

பாட­சா­லை­கள், பதிவு செய்­யப்­பட்ட ஆல­யங்­கள், விளை­யாட்டு மைதா­னங்­கள், சிறு­வர் பூங்கா மருத்­து­வ­ம­னை­கள் போன்ற இடங்­க­ளில் இருந்து சுமார் 500 மீற்­றர் தூரத்­திற்கு உட்­பட்ட வர்த்­தக நிலை­யங்­க­ளில் புகை­யி­லை­சார் உற்­பத்­திப் பொருள்­கள் விற்­பனை செய்­வதை தடை செய்ய வேண்­டு­மென யாழ். மாவட்­டச் செய­ல­ரி­னால் அனுப்­பப்­பட்ட கடி­தம் சபை­யில் தவி­சா­ள­ரால் வாசிக்­கப்­பட்­டது. இது தொடர்­பாக ஆராய்ந்த சபை­யி­னர் எதிர்­வ­ரும் ஜன­வரி முத­லாம் திகதி தொடக்­கம் 2019ஆம் ஆண்­டுக்­கான வர்த்­தக நிலைய உரி­மத்­திற்கு விண்­ணப்­பிக்­கும் வர்த்­த­கர்­க­ளுக்கு புகை­யி­லை­சார் உற்­பத்­திப் பொருள்­கள் விற்­பனை செய்­யக்­கூ­டாது என அறி­வு­றுத்­தல்­கள் வழங்­க­வேண்­டு­மெ­ன­வும் வர்த்­தக நிலை­யத்­தில் புகை­யி­லை­சார் உற்­பத்­திப் பொருள்­க­ளான சிக­ரட் பீடி சுருட்டு போன்­றவை விற்­பனை செய்­வது தொடர்­பா­கக் கண்­கா­ணிப்­பினை மேற்­கொண்டு புகை­யி­லை­சார் உற்­பத்­திப் பொருள்­கள் விற்­பனை செய்­யாத வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு வரு­டத்­திற்­கான வியா­பார உரி­மத்­தினை வழங்­கு­வ­தெ­ன­வும் எமது அறி­விப்­பி­னைச் செயற்­ப­டுத்­தாத வர்த்­த­கர்­கள் மீது வியா­பார உரி­மம் இன்றி வர்த்­தக நட­வ­டிக்­கை­யில் ஈடு­ப­டு­வ­தாக சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டு­மெ­ன­வும் ஏக­ம­ன­தாத் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­தெ­ன­வும் தெரி­வித்­தார் .

You might also like