கரடிக் குன்று தோமையார் ஆலய திருவிழா!!

கிளிநொச்சி நாச்சிக்குடா கரடிக் குன்று புனித தோமையார் ஆலய திருவிழா இன்று நடைபெற்றது.

திருவிழாத் திருப்பலி மாதகல் பங்கின் புனித செபஸ்தியார் ஆலய முதல் புதிய குரு அருட்பணியாளர் அன்ரனிதாஸ் லியான்ஸ் தலைமையில் பங்குத்தந்தை அருட்பணியாளர் சுமன், அருட்பணியாளர் யேசு பாலன் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.

திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சுரூப ஆசியுடன் திருவிழா இனிதே நிறைவு பெற்றது.

You might also like