காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி- மன்னாரில் போராட்டம்!!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, அவர்களது உறவினர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவினர்கள் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு ஆகியவை இணைந்து போராட்டத்தை நடத்தின.

சர்வ மத தலைவர்கள், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார், மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் உட்பட மன்னார் நகர சபையின் உப தலைவர், உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

You might also like