காணாமல் போன மலேசியா விமானம் – ஆதாரத்தை வெளியிட்ட நிபுணர்!!

0 21

239 பயணிகளுடன் காணாமல் போன மலேசிய விமானம் பற்றி நிபுணர் ஒருவர் ஆதாரமாக கூகுள் செயற்கை கோள் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8-ஆம் திகதி, மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பெய்ஜிங்கிற்கு சென்ற போயிங் 777 என்ற விமானம் திடீரென்று காணாமல் போனது.

விமானத்தில் பயணித்த பயணிகள் நிலை என்ன? மற்றும் விமானத்திற்கு என்ன நிகழ்ந்தது என்பது குறித்து இப்போது வரை கண்டுபிடிக்க முடியாத மர்மமாகவே இருந்து வருகிறது.

விமானத்தின் உடைந்த பாகங்கள் கிடைத்தது என்று அவ்வப்போது பல தகவல்கள் வந்தாலும் அவை அனைத்தும் உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் காணமல் போன மலேசிய விமானத்தின் பாகங்கள் கம்போடியாவின் தலை நகரத்திற்குப் பக்கத்தில் இருக்கிற உயர்ந்த மலைக் காடுகளில் இருப்பதாக , பிரித்தானியா தொழில்நுட்ப நிபுணர் இயன் வில்சன் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

அதற்கு ஆதாரமாகக் கூகுள் செயற்கைக்கோள் வரைபடம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில் விமானம் விழுந்து கிடப்பது தெளிவாகத் தெரிந்தது. செயற்கைக் கோள் வரைபடத்தில் இருக்கிற விமானத்தின் நீளம் 70 மீற்றர்கள் இருப்பதாகவும் காணாமல் போன மலேசியா விமானம் 63.9 மீற்றர் அளவு கொண்டது என்றும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்தனர்.

விமானத்தின் வால் பகுதி உடைந்து காணப்படுவதால் படத்தில் இருப்பது மலேசியா போயிங் விமானமாக இருக்கலாம் என நம்பப்பட்டது.

இதனால் வான்வழி துறை ஆராய்ச்சியாளர்கள் கடந்த மூன்று நாள்களாக ஹெலிகாப்டர் உதவியுடன் வரைப்படம் காட்டிய இடத்தில் விமானத்தின் பாகங்கள் இருக்கிறதா என்பதைத் தேடி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் வியூ என்ற நிறுவனம் இயன் வில்சன் குறிப்பிட்ட கம்போடிய மலைப் பகுதிகளில் தன்னுடைய செயற்கை கோள் உதவியுடன் விமானத்தின் பாகங்கள் இருக்கிறதா எனத் தேடியது.

தேடுதலின் கடைசியில் 2015, 2016, 2017 ஆம் ஆண்டுகளின் செயற்கை கோள் வரைபடங்களைக் கொண்டு ஆராய்ந்து பார்த்ததில் குறிப்பிட்ட பகுதியில் எந்த விமானமும் இல்லை எனத் தெரிவித்தது. தொடர்ந்து தேடுதல் பணி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

You might also like