குடி­யே­றி­கள் தொகை அதி­க­ரிப்பு: கல்­ல­றை­யா­கும் லிபி­யக் கடல்!!

0 9

இந்த மாதத்­தின் ஆரம்­பத்­தில் லிபி­யக் கடற்­ப­கு­தி­யில் படகு ஒன்று உடைந்து மூழ்­கி­ய­தில் 100க்கு மேற்­பட்ட லிபிய நாட்­ட­வர்­கள் இறந்­தி­ருப்­ப­தா­கப் பன்­னாட்­டுச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

செப்ரெம்­பர் முத­லாம் திக­தி­யன்று லிபி­யா­வி­லி­ருந்து இத்­தாலி நோக்­கிப் பய­ணத்தை ஆரம்­பித்த 2பிளாஸ்­ரிக் பட­கு­க­ளில் ஒன்றே உடைந்து முழ்­கி­யி­ருக்­கி­றது. இதில் உயிர் தப்­பிய 276 பேர் தலை­ந­கர் திரி­போ­லி­யின் தென்­கி­ழக்­கில் சுமார் 100கிலோ­மீற்­றர்­கள் தொலை­வி­லுள்ள கோம்ஸ் துறை­முக நக­ருக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ள­னர்.

கர்ப்­பி­ணிப் பெண்­கள், குழந்­தை­கள், சிறு­வர்­கள் உட்­பட இதில் உயிர் தப்­பி­ய­வர்­க­ளுக்கு ஏற்­பட்ட தீகா­யங் களுக்குச் சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கி­றது.

இத்­தாலி உட்­பட்ட ஐரோப்­பா­வின் அயல்­நா­டு­க­ளில் குடி­யே­றும் நோக்­கு­டன் மத்­தி­ய­த­ரைக் கடல்­வ­ழி­யா­கச் சட்­ட­வி­ரோ­த­மா­கப் பய­ணிப்­ப­வர்­க­ளின் தொகை அதி­க­ரித்­து­வ­ரு­கின்­றது.
அத்­து­டன் மத்­திய தரைக் கட­லைக்­க­டக்­கின்ற அவர்­க­ளின் கடற்­ப­ய­ணம் ஆபத்­துக்­கள் பல­வற்­றைக் கொண்­டுள்­ளது.

இவ்­வாறு மத்­திய தரைக் கட­லைக் கடந்து சென்­ற­வர்­க­ளில் ஆயி­ரத்து 500க்கு மேற்­பட்ட குடி­யே­றி­கள் இந்த ஆண்டு இறந்­துள்­ள­தா­கக் குடி­யேற்­றத்­துக்­கான பன்­னாட்டு நிறு­வ­னம் ஒன்று கூறு­கின்­றது. இதில் லிபிய நாட்­ட­வர்­களே அதி­கம்.

லிபி­யா­வில் இருந்து வெளி­யே­று­கின்ற குடி­யே­றி­கள் சென்­ற­டை­யும் பகு­தி­யாக இத்­தாலி இருக்­கி­றது. குடி­யே­றி­க­ளின் கப்­பல்­கள் நுழை­வ­தற்கு அது அனு­மதி மறுத்­தி­ருந்­தா­லும், கடல் ஆபத்­தில் சிக்­கிக்­கொள்­கின்ற அக­தி­கள் பலர் இத்­தா­லி­யால் மீட்­கப்­பட்­டுள்­ள­னர்.

மத்­திய தரைக்­க­டலைக் கடந்து செல்­வோ­ரின் எண்­ணிக்கை 2015ஆம் ஆண்­டில் பத்து இலட்­சத்­துக்கு மேற்­பட்­ட­தாக இருந்­தது. தற்­போது அது குறைந்­துள்­ளது. ஆனால், இந்தப் பய­ணம் உயி­ருக்கு ஆபத்தை ஏற்­ப­டுத்­து­வ­தா­கும். சில­ரின் இறப்­புக்­களே தெரிய வரு­கின்­றன. ஐரோப்­பா­வுக்கு வந்து சேர்­வோ­ரை­விட அதிக சத­வீத மக்­கள் இறந்­து­வி­டு­கின்­ற­னர்.

லிபி­யாவை நீண்­ட­கா­ல­மாக ஆட்சி செய்து வந்த தலை­வர் மௌமார் கடா­பி­யின் ஆட்சி 2011ஆம் ஆண்­டில் நிறை­வுக்கு வந்­தது. அன்­றி­லி­ருந்து லிபி­யா­வின் உள்நாட்­டு அர­சி­யல் ஸ்திர­மில்­லாத நிலை­யி­லேயே காணப்­ப­டு­கி­றது. கடந்த ஓகஸ்ட் மாதம் திரி­போ­லி­யில் கடும் மோதல் வெடித்­தி­ருந்­தது. இந்த நிலை­யில் லிபி­யா­வி­லி­ருந்து கடல்­வ­ழி­யாக வெளி­யே­று­கின்ற அக­தி­க­ளின் தொகை அதி­க­ரித்­துக்­கொண்டு வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.

You might also like