side Add

கூட்டாட்சி என்ற பெயரின்றி அதிகூடிய அதிகாரப் பகிர்வு

கிளிநொச்சியில் கூறினார் சம்பந்தன்

காணி, சட்­டம் ஒழுங்கு, பொலிஸ், கல்வி, சுகா­தா­ரம், விவ­சா­யம், நீர்ப்­பா­ச­னம், கடற்­றொ­ழில், எல்­லா­வி­த­மான கைத் தொ­ழில், புனர் வாழ்வு, மீள்­கு­டி­யேற்­றம், தொழில்­வாய்ப்பு உட்­ப­டச் சகல சமூ­கப் பொரு­ளா­தார விட­யங் க­ளை­யும் தாமே தமது பிர­தி­நி­தி­கள் ஊடா­கக் கையா­ளக் கூடிய வகை­யில் -கூட்­டாட்சி என்ற சொல்­லைப் பயன்­ப­டுத்­தா­மல் அதி­கூ­டிய அதி­கா­ரங்­கள் பகி­ரப்­ப­டு­மாக இருந்­தால் அது குறித்து தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்பு சாத­க­மா­கப் பரி­சீ­லிக்­கும்.
இவ்­வாறு தெரி­வித்­தார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் தலை­வ­ரும், எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்பந்­தன்.

கடந்த 12 ஆம் திகதி கிளி­நொச்சி கூட்­டு­ற­வா­ளர் மண்­ட­பத்­தில் இடம்­பெற்ற தமி­ழ் அரசு கட்சி உறுப்­பி­னர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட் டார்.
அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது:

அர­சி­யல் தீர்வு சம்பந்­த­மான முயற்­சி­க­ளைக் குழப்­பு­வ­தற் குப் பல தரப்­பு­கள் மிக­வும் தீவி­ர­மா­கச் செயற்­ப­டு­கின்­றன. பெரும்­பான்மை இனத்­தின் மத்­தி­யில் தீவி­ரப் போக்­கு­டை­ய­வர்­கள் இந்த முயற்­சியை குழப்­பு­வ­தற்கு மிக­வும் முனைப்புடன் செயற்­பட்டு வரு­கின்­றார்­கள்.

மகிந்த ராஜ­பக்ச, அவ­ரு­டைய அணி­யைச் சேர்ந்­த­வர்­கள், வேறு சில கட்­சி­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் புதிய அர­சி­யல் தீர்வு விட­யத்­தைக் குழப்­பத் தீவி­ர­மா­கச் செயற்­ப­டு­கின்­றார்­கள். பெரும்­பான்­மை­யின மக்­க­ளைக் குழப்பி ஒரு தீர்வு ஏற்­ப­டு­வ­தைத் தடுக்க இவர்­கள் முற்­ப­டு­ கின்­றார்­கள்.

அரசியல் தீர்வு முயற்சியைக்
குழப்ப முயல்கின்றனர் பல தரப்பினர்

அதே­ச­ம­யம் மக்­க­ளால் இந்­தக் கரு­மங்­க­ளைக் கையாள்­வ ­தற்­குத் தெரிவு செய்­யப்­ப­டா­த­வர்­கள், இன்­றைக்கு இடம்­பெ­று­கின்ற முயற்­சி­க­ள் குறித்துப் பல வித­மான குறை­கள் குற்­றங்­க­ளைக் கூறி மக்­க­ளின் மனங்­க­ளில் ஒரு குழப்­பத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சிப்­பதை நாங்­கள் அவ­தா­னிக்­கி­றோம்.

நாங்­கள் பகி­ரங்­க­மா­கக் கூறி நிற்­கின்­றோம். ஒரு அர­சி­யல் தீர்வு சம்பந்­த­மா­கத் தற்­போது ஆக்­க­பூர்­வ­மான உறு­தி­யான முயற்சி நடை­பெ­று­கின்­றது. ஒரு நிதா­ன­மான நல்ல சூழல் காணப்­ப­டு­கி­றது. நியா­ய­மான நல்ல சூழல் என்று நான் கூறு­வ­தற்குக் கார­ணம் என்­ன­வென்­றால், இந்த அரசு ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மை­யில் உரு­வாக்கப்பட் டது.

அரச தலை­வ­ரா­கத் தெரிவு செய்­யப்­பட்ட மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­னு­டைய சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் ஒரு பகு­தி­யை­யும் உள்­ள­டக்­கி­யது. ஆன­ப­டி­யால் இன்று ஆட்சி செய்­கின்ற அரசு, இந்த இரண்டு கட்­சி­க­ளைச் சார்ந்த ஒரு அரசு. அவர்­க­ளுக்கு நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றில் இரண்டு பெரும்­பான்மை இல்­லாது விட்­டா­லும் கூட, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஆத­ர­வு­டன், மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் ஆத­ர­வு­டன், ஏனைய இஸ்­லா­மிய தமிழ் உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ர­வு­டன் இல­கு­வாக மூன்­றில் இரண்டு பெரும்­பான்மை பெறக் கூடிய நிலைமை இருக்­கி­றது.

இந்த நிலைமை முன்னைய காலத்­தில் இருக்­க­வில்லை. சந்­தி­ரிகா குமா­ர­துங்க அரச தலை­வ­ராக இருந்­த­போது புதிய அர­ச­மைப்பை உரு­வாக்கி, அர­ச­மைப்­பில் பெரும் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி ஒரு நியா­ய­மான அதி­கா­ரப் பகிர்வை உரு­வாக்கி, நியா­ய­மான அர­சி­யல் தீர்வை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சித்­தார். ஆனால் துர­திஸ்­ட­வ­ச­மாக அவ­ரால் நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றில் இரண்டு பெரும்­பான்­மையைப் பெற­மு­டி­ய­வில்லை. ஆனால் இன்­றைக்கு அந்த நிலைமை இல்லை. எல்­லோ­ரும் ஒற்­று­மை­யா­கச் செயற்­பட்­டால், ஒரு நியா­ய­மான அர­சி­யல் தீர்வை உரு­வாக்­க­லாம்.

ஒரு புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­மாக இருந்­தால் தற்­போ­தைய அர­ச­மைப்­பின் பிர­கா­ரம், அது நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றில் இரண்டு பெரும்­பான்­மை­யைப் பெற­வேண்­டும். அதன் பிறகு மக்­க­ளின் அங்­கீ­கா­ரத்­தைப் பெற­வேண்­டும்.அவ்­வி­த­மா­கப் பெற்­றால்­தான் அது ஒரு புதிய அர­ச­மைப்­பாக ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டும்.

புதிய அர­ச­மைப்பு அமைக்­கப்­பட்ட பிறகு நாடா­ளு­மன்றம் ஒரு அர­ச­மைப்­புச் சபை­யாக மாற்­றப்­ப­டும். நாட்­டுக்­குப் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­வ­தற்கு மிக­வும் கட்­டுக்­கோப்­பான முயற்சி நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது. அந்­தப் பணியைத் தமிழ் மக்­கள் சார்­பாக, தமிழ்த்­தே­சி­யக் கூட்­ட­மைப்பு சார்­பாக நாங்­கள் இரு­வர் செய்து வரு­கின்­றோம்.

அரசமைப்புத் தொடர்பாக கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள்
புதிய அர­ச­மைப்­பில் கவ­னிக்­க­வேண்­டிய விட­யங்கள் என்­ன­வென்­றால், தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அதி­கா­ரப் பகிர்வு, இரண்­டா­வது அரச தலை­வர் நிர்­வாக ஆட்­சி­முறை, மூன்­றா­வது தற்­போ­தைய தேர்­தல் முறை.

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கும் முயற்சி தொடர்­பில் நாங்­கள் அதி­கம் பத்­தி­ரி­கை­க­ளுக்­குக் கூறு­வ­ தில்லை. அவ்­வாறு கூறி­னால் சம்பந்­தன் இப்­ப­டிச் சொல்­கி­றார் எனச் சொன்­ன­வு­டன் தெற்­கி­லி­ருந்து பத்துப் பேர் அதற்­குப் பதில் சொல்ல வந்­து­வி­டு­வார்­கள்.

அது பெரும்­பான்மை இனத்­தின் மத்­தி­யில் ஒரு குழப்­பத்தை ஏற்­ப­டுத்­த­லாம். ஆன­ப­டி­யால், எமது மக்­கள் ஓர­ள­வுக்கு நிலை­மை­களை அறி­யா­மல் இருக்­கும் சூழல் இருந்­தா­லும்கூட, நாங்­கள் மௌனி­க­ளாக இருக்க வேண்­டிய ஒரு கட்­டா­யச் சூழல் இருக்­கத்­தான் செய்­கி­றது. ஏனென்­றால், பல கரு­மங்­கள் பல தட­வை­கள் குழப்­பட்­டி­ருக்­கின்­றன.

ஆரம்­பத்­தில் நாங்­கள் குழம்­பக்­கூ­டாது. ஒரு கட்­டத்­தில் எல்­லாம் வெளி­வ­ரும். ஒரு தீர்வு நியா­ய­மாக வரு­மாக இருந்­தால் அதனை நாங்­கள் எங்­கள் மக்­க­ளுக்கு முன்­னால் கொண்டு வரு­வோம். அதன்­போது இவ்­வி­த­மான கூட்­டங்­களை ஒவ்­வொரு மாவட்­டங்­கள் தோறும் ஏற்­பாடு செய்து மக்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டு­வோம். மக்­க­ளுக்கு விளக்­கு­வோம். மக்­க­ளின் கருத்­துக்­களை அறிந்­து­தான் நாங்­கள் ஒரு முடி­வெ­டுப்­போம். மக்­க­ளின் அனு­மதி இல்­லா­மல் எந்­த­வொரு தீர்­வை­யும் நாங்­கள் ஏற்­றுக்­கொள்­ள­மாட்­டோம். அது எங்­க­ளு­டைய கடமை.

இது­வரை நடந்த பேச்­சுக்­க­ளின்படி மிக­வும் கூடி­ய­ள­ வில் அதி­கா­ரங்­கள் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. காணி, சட்­டம் ஒழுங்கு, பொலிஸ், கல்வி, சுகா­தா­ரம், விவ­சா­யம், நீர்ப்­பா­ச­னம், கடற்­றொ­ழில், எல்­லா­வி­த­மான கைத்­தொ­ழில், புனர்­வாழ்வு, மீள்­கு­டி­யேற்­றம், தொழில்­வாய்ப்பு, சமூக பொரு­ளா­தார விட­யங்­கள் என்பவற்றில் எமது மக்­க­ளின் நாளாந்த தேவை­க­ளைப் பூர்த்தி செய்­யக் கூடிய வகை­யில் அதி­கா­ரங்­கள் பகிர்ந்­த­ளிக்­கப் ப­டும்.

வழங்கப்படும் அதிகாரங்கள் உறுதியானவையாக இருக்க வேண்டும்
வழங்­கப்­ப­டு­கின்ற அதி­கா­ரங்­கள் உறு­தி­யா­ன­வையாக இருக்­க­வேண்­டும். மீளப்­பெ­றப்­ப­டாத வகை­யில் இருக்­க­வேண்­டும். அந்த அதி­கா­ரங்­க­ளுக்கு எவ்­வி­த­மான தடை­க­ளும் இல்­லாது இருக்க வேண்­டும். அவ்­வி­த­மாக இருந்­தால்­தான் அது உறு­தி­யாக இருக்­கும்.

கூட்­டாட்சி முறையை அவர்­கள் ஏற்­றுக்­கொண்­டால் அது நிச்­ச­ய­மாக நடை­பெ­றும். ஆனால் துர­திஸ்­ட­ வ­ச­மாக இந்த நாட்­டில் கூட்­டாட்சி எனும் சொல் ஒரு பயங்­க­ர­வா­தச் சொல்­லா­கக் கரு­தப்­ப­டு­கி­றது. கூட்­டாட்சி என்­றால் அது பிரி­வி­னைக்­குச் செல்­லும் எனும் கருத்து இருக்­கி­றது.

இந்­தியா பல மாநி­லங்­க­ளைக் கொண்ட ஒரு நாடு. அங்கு எல்­லா­வற்­றி­லும் அதி­கா­ரப் பகிர்வு ஒரே வித­மாக இருக்­கி­றது. அங்கே கூட்­டாட்சி எனும் சொல் பாவிக்­கப்­ப­ட­வில்லை. ஒற்­றை­யாட்சி எனும் சொல்­லும் பாவிக்­கப்­ப­ட­வில்லை. இவ்­வாறே உல­கில் பல நாடு­க­ளில் ஒற்­றை­யாட்சி எனும் சொல்­லும் கூட்­டாட்சி எனும் சொல்­லும் அர­ச­மைப்­பில் இல்லை. ஆனால் அங்­கெல்­லாம் அதி­கா­ரப் பர­வாக்­கல் காணப்­ப­டு­கி­றது. எனவே எங்­க­ளுக்­கும் அதி­கா­ரப் பகிர்வு தேவை. அதி­கா­ரம் மத்­தி­யில் குவிந்து கிடப்­ப­தால் கூடு­த­லாக ப்பாதிக்­கப்­ப­டு­கின்­ற­வர்­கள் தமிழ் மக்­கள்தான்.

தமி­ழ் அரசுக் கட்­சி­யி­னர் பத­வி­க­ளுக்­காக விலை­ போ­கின்­ற­வர்­கள் அல்­லர். அம­ரர் திருச்­செல்­வத்­தைத் தவிர வேறு எவ­ரும் அமைச்­சர்­க­ளாக இருக்­க­வில்லை. அமிர்­த­லிங்­கத்­தின் காலம் முதல் எங்­க­ளுக்கு முக்­கிய அமைச்­சுப்­பொ­றுப்பு தரு­வ­தற்குப் பல அரச தலை­வர்­கள் உறு­தி­ய­ளித்­தார்­கள். ஆனால் நாம் அதனை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. எனவே இங்கு கூச்­சல் இடுகின்ற தம்­பி­மார்­கள் விளங்­கிக்­கொள்ள வேண்­டும்.

நாம் விலை­போக மாட்­டோம். எங்­கள் மக்­களை நாம் கடைசி வரை கைவி­ட­மாட்­டோம். நாங்­கள் தந்தை செல்­வா­வின் வழி வந்­த­வர்­கள். தந்தை செல்­வா­வுக்­குத் துரோ­கம் செய்­ய­மாட்­டோம். ஒரு குழப்ப நிலை­மைக்கு நாங்­கள் கார­ணி­க­ளாக இருக்கக் கூடா­து-­ என்­றார்.

 

You might also like