கொக்­கி­ளாய் கனிய மணல் அகழ்­வில்  சுற்­றுச் சூழ­லுக்­குப் பாதிப்பு வரக்­கூ­டாது

நேற்­றைய கலந்­து­ரை­யா­ட­லில் தீர்­மா­னம்

கொக்­கி­ளாய் கனிய மணல் அகழ்வு நட­வ­டிக்­கை­யில், சுற்­றுச் சூழ­லுக்கு எந்­தப் பாதிப்­பும் இல்லை என்­பது உறு­திப்­ப­டுத்­த­வேண்­டும்.

இந்­தத் திட்­டத்தை ஆய்வு செய்­யும் அறிக்கை, யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரி­யர்­கள், ஆய்­வா­ளர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு அது சரி­யா­னது என்று உறு­திப்­ப­டுத்த வேண்­டும் என் றும் இந்­தப் பணியை ஒரு குழு அமைத்­துக் கண்­கா­ணிப்­பது என­வும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

கொக்­கி­ளாய் கனிய மணல் அகழ்வு தொடர்­பில் சிறப்­புக் கலந்­து­ரை­யா­டல் ஒன்று முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­லக கேட்­போர் கூடத்­தில் நேற்று இடம்­பெற்­றது. அதில் மேற்­கண்ட தீர்­மா­னம் எடுக்­கப்­பட்­டது.

சுற்­றுச் சூழ­லுக்­குப் பாதிப்பு ஏற்­ப­டக் கூடாது, வேலை­வாய்ப்பு வழங்­கும்­போது மாகாண விகி­தா­சார அடிப்­ப­டை­யில் வழங்க வேண்­டும், வரு­மா­னம் தனியே திறை­சே­ரிக்கு மட்­டும் செல்­லாது மாகா­ணத்­துக்கு ஒரு­ப­குதி வரு­மா­னம் வழங்க வேண்­டு­மென்று தீர்­மா­னம் மேற்­கொள்­ளப்­பட்­டது.இத­னு­டைய வேலை­வாய்ப்­புக்­கள் மாகாண விகி­தா­சார அடிப்­ப­டை­யில் வழங்­கப்­பட வேண்­டும்.

வரு­மா­னம் மாகாண சபைக்­கும் பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்­டும். எமது பிர­தேச மக்­க­ளுக்­குப் பய­னுள்ள வகை­யி­லும் சுற்­றுச்­சூ­ழல் பாதிப்பு அற்ற வகை­யி­லும் நடக்க வேண்­டும் என­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

அதனை தொடர்ந்து சுற்று சூழல் தொடர்­பான அறிக்கை கிடைத்த பின்­னர் இது தொடர்­பா­கக் கலந்­து­ரை­யா­டு­வது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் கொக்­கி­ளாய்ப் பகு­தி­யில் கனிய மணல் அகழ்­வது தொடர்­பில் பல இடங்­க­ளி­லும் பேசப்­பட்டு, மாவட்ட அபி­வி­ருத்­திக் குழுக் கூட்­டத்­துக்கு முன்­னர் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், அமைச்­சர் ரிசாட் பதி­யு­தீன், மாவட்­டச் செய­லர், அர­சி­யல் வாதி­கள், அதி­கா­ரி­கள் தலை­மை­யில் கூட்­ட­மொன்று நடை­பெற்­றது.

இந்­த­வி­ட­யம் தொடர்­பில் ஆரா­யக் குழு ஒன்று அமைப்­ப­தா­கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அந்­தக் குழுவே நேற்­றுக்­கூடி இந்த விட­யங்­களை ஆராய்ந்­தது.

இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லில் மாவட்ட மேல­திக செய­லர், இலங்கை கனி­ய­ம­ணல் லிமிற்­றட் நிறு­வன தலை­வர் திரு­மதி இந்­திக்க ரண­துங்க மற்­றும் பிர­திப் பொது முகா­மை­யா­ளர் உள்­ளிட்ட அதி­கா­ரி­கள் மற்­றும் வடக்கு மாகாண விவ­சாய மீன்­பிடி சுற்­றுச்­சூ­ழல் அமைச்­சர் க.சிவ­நே­சன், முன்­னாள் வடக்கு மாகாண விவ­சாய மீன்­பிடி சுற்­றுச்­சூ­ழல் அமைச்­ச­ரும் மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான பொ.ஐங்­க­ர­நே­சன், வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் து ரவி­க­ரன், கரை­து­றைப்­பற்று பிர­தேச சபைத் தவி­சா­ளர், கொக்­கி­ளாய் உறுப்­பி­னர் உள்­ளிட்ட அர­சி­யல் பிர­மு­கர்­கள், யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கப் பேரா­சி­ரி­யர் உள்­ளிட்ட திணைக்­கள தலை­வர்­கள், அதி­கா­ரி­கள் கலந்­து­கொண்­ட­னர் என்று அமைச்­சர் க.சிவ­னே­சன் தெரி­வித்­துள்­ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close