சபுமல்கஸ் கந்தயாக மாற்றப்படும்- கச்சல் சமணங்குளம்!!

0 153

தமி­ழர் பகு­தி­க­ளில் இன­ரீ­தி­யான பாகு­பாட்டை ஏற்­ப­டுத்­து­வ­தற்­குச் சிங்­கள அர­சு­கள் பல்­வே­று­வ­கை­யான யுக்­தி­க­ளைப் பயன்­ப­டுத்தி வந்­துள்­ளன. கிழக்கு மாகா­ணத்­தின் பர­வா­லன பகு­தி­கள் சிங்­கள மய­மாக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், தற்­போது வடக்கை நோக்கி அதன் பார்வை அகன்­றுள்­ளதை நிக­ழும் சம்­ப­வங்­கள் உணர்த்­து­கின்­றன. போருக்­குப் பின்­ன­ரான மகிந்த ராஜபக்­ச­வின் ஆட்­சிக் காலப்­ப­கு­தி­யில் அதன் தன்­மை­யின் வேகம் அதி­க­ரித்­துக் காணப்­பட்­ட­து­டன் அதற்­குப் பின்­ன­ரான நல்­லாட்­சி­யி­லும் அது தொடர்ந்து வரு­கின்­றமை தமி­ழர்­க­ளைப் பொறுத்­த­வரை ஏமாற்­றமே.

இரை­யா­கும் வவு­னியா
வடக்­கைப் பொறுத்­த­வரை, குறிப்­பாக வவு­னியா மாவட்­டம் அர­சின் கழு­குப் பார்­வைக்கு அன்­றா­டம் இரை­யா­கி­வ­ரு­கின்­றது. குறிப்­பாகப் பெரும்­பான்­மை­யா­கச் சிங்­கள மக்­க­ளைக் கொண்­ட­மைந்­துள்ள அனு­ரா­த­பு­ரத்­தின் எல்­லை­யைப் பகிர்ந்­து­கொள்­வ­தால் குடி­யேற்­றங்­கள் மேற்­கொள்­வ­தற்கு இல­கு­வா­ன­தா­கி­விட்­டது வவு­னியா. ஏற்­க­னவே ஆட்­சி­யில் இருந்த சிங்­க­ள­அ­ர­சி­யல்­வா­தி­க­ளால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட குடி­யேற்­றங்­க­ ளால் கணி­ச­மான சிங்­கள மக்­களை வவு­னியா கொண்­டுள்­ளது. மேலும் வவு­னி­யா­வூ­டாக வடக்­கில் சிங்­க­ளக் குடி­ப் ப­ரம்­பலை உரு­வாக்­கும் நீண்­கா­லத் திட்­டத்தை அரசு மிக­வும் நூதன முறை­யில் மேற்­கொள்­வ­து­டன், அதில் வெற்­றி­யும் அடைந்­து­வ­ரு­கின்­றது.

இத­னால் மிக­வும் பாதிக்­க­ப்பட்­டுள்ள பகு­தி­யாக நெடுங்­கேணி விளங்­கு­கி­றது. பெருங்­கா­டு­களை உள்­ள­டக்­கிய நெடுங்­கே­ணிப் பகுதி தமி­ழர்­கள் பெரும்­பாண்­மை­யாக வாழ்ந்த வர­லாற்­றைக் கொஞ்­சம், கொஞ்­ச­மாக இழந்து வரு­கின்­றது. ஏற்­க­னவே நெடுங்­கே­ணி­யின் கிழக்­குப் பக்­க­மாக உள்ள பகு­தி­க­ளில் காடு­களை அழித்­தும், தமி­ழர்­க­ளின் பூர்­விக நிலங்­க­ளைக் கள­வா­டி­யும் ஆயி­ரக்­க­ணக்­கான சிங்­க­ள­மக்­கள் குடி­யேற்­ற­பட்­டுள்­ள­னர். அதன் இன்­னொரு கட்­ட­மாக நெடுங்­கே­ணிப் பிர­தே­சத்­தின் கச்­சல்­ச­ம­னங் கு ளம் என்ற தமிழ் மக்­க­ளின் பூர்­வி­கப் பகுதி பௌத்த – சிங்­க­ளப் பிர­தே­ச­மாக மாற்­றப்­பட்டு வரு­கி­றது.

கச்­சல் சம­னங்­கு­ளம்
நெடுங்­கே­ணி­யைத் தள­மா­கக் கொண்ட, வவு­னியா வடக்­குப் பிர­தேச செய­ல­கத்­துக்­குட்­பட்ட ஊற்­றுக்­கு­ளத்­துக்­கும், போகஸ்வௌ என்று சிங்­க­ளப் பெயர் மாற்­ற­ப்பட்ட கொக்­கச்­சான் குளத்­துக்­கும் இடைப்­பட்ட பகு­தியே கச்­சல்­ச­ம­னங்­கு­ளம். முற்­று­மு­ழு­தா­கத் தமிழ் மக்­க­ளின் பூர்­விக நிலங்­க­ளைக் கொண்­ட­மைந்­தி­ருந்த கொக்­கச்­சான்­கு­ளப் பகு­தி­யில் ஆயி­ரக்­க­ணக்­கான சிங்­கள மக்­க­ளைக் குடி­யேற்றி, போகஸ்வௌ என்று பெயர்­மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளது. இரட்­டைத் தொகு­தி­களை உள்­ள­டக்­கிய வகை­யில் வவு­னியா வடக்­குப் பிர­தேச சபை­யு­டன் இணைக்­கப்­பட்­டுள்­ளது. தமி­ழர்­க­ளின் தடம்­தெ­ரி­யாமல் உரு­மாற்­றம் செய்­ய­ப்பட்ட கொக்­கச்­சான்­கு­ளம்­போல அதற்கு அரு­கா­மை­யாக அமைந்­துள்ள கச்­சல்­ச­ம­னங்­கு­ளத்­தி­லும் சிங்­க­ளக் குடி­யேற்­றத்தை நிறுவி சப்­பு­மல்­கஸ்­கந்த எனும் பெயர்­மாற்­றம் செய்­யும் கப­டத் திட்­டத்தை ஆட்­சி­யில் அமர்ந்­தி­ருக்­கும் நல்­லாட்சி அரசு சூச­க­மாக மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றது.

நெடுங்­கே­ணியை அண்­மித்த ஒலு­மடு, மரு­தோடை, பட்­டிக்­கு­டி­யி­ருப்பு, வெடி­வைத்­த­கல் ஆகிய பிர­தே­சங்­க­ளில் வாழ்ந்த தமிழ்­மக்­கள் தமது விவ­சாய நட­வ­ டிக்­கை­களை கச்­சல்­ச­ம­னங்­கு­ளத்­தில் அமைந்­துள்ள தமது பூர்­வி­க­நி­லங்­க­ளில் மேற்­கொண்­டு­வந்­தி­ருக்­கின்­ற­னர். குறித்த பகு­தி­யில் அமைந்­துள்ள குள­மா­னது 200 ஏக்­க­ருக்­கும் அதி­க­மான வயல்­நி­லங்­க­ளுக்கு நீர் பாய்ச்­சக் கூடி­ய­நி­லை­யில் அமைந்­துள்­ளது. போர் கார­ண­மாக ஏற்­பட்ட இடப்­பெ­யர்­வு­க­ளால் அடை­யா­ளங்­களை இழந்­து­நிற்­கும் குறித்­த­ப­குதி பெருங்­கா­டு­களை உள்­ள­டக்­கிய பிர­தே­ச­மா­கக் காட்­சி­ய­ளிக்­கின்­றது. இதைத் தனக்­குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளும் பௌத்த பேரி­ன­வா­தம் குறித்த பகு­தி­யைச் சிங்­க­ள­ம­ய­மாக்­கும் செயற்­பாட்டை மேற்­கொண்­டுள்­ளது.

புதி­தாக முளைத்த புத்­தர்
கச்­சல்­ச­ம­னங்­கு­ளம் பகு­தி­யில் அமைந்­துள்ள விவ­சா­யக் குளத்­துக்கு அரு­கா­மை­யில் கடந்­த­வா­ரம் இரண்டு புத்­தர் சிலை­கள் நிறு­வப்­பட்­டன. சர்ச்சையை ஏற்­ப­டுத்­தின. நான்கு அடி உய­ரம் உள்ள குறித்த சிலை­க­ளைப் பரா­ம­ரிப்­ப­தற்­காக 18 வய­து­நி­ரம்­பிய பௌத்­த­ம­த­குரு ஒரு­வ­ரும், அவ­ரோடு இணைந்த சில­ரும் அந்­தப் பகு­தி­யில் குடில் அமைத்­துத் தங்­கி­யுள்­ள­னர். குறித்த பகுதி சிங்­கள மக்­கள் முன்­னர் வாழந்­த­ப­குதி என்­றும் பேரால் ஏற்­பட்ட இடப்­பெ­யர்­வு­கள் கார­ண­மாக சிங்­கள மக்­கள் இடம்­பெ­யர்ந்­தா­க­வும் குறித்த பௌத்­த­தே­ரர் அங்கு செல்­ப­வர்­க­ளுக்கு எடுத்­தி­யம்பி வரு­கி­றார்.

இதே­வேளை வவு­னியா, முல்­லைத்­தீவு மாவட்­டங்­க­ளும் முன்­னர் வேறு பெய­ரில் பௌத்த சிங்­கள மக்­க­ளின் பூர்­விக பகு­தி­யாக இருந்­த­தா­க­வும், இடப்­பெ­யர்­வின் பின்­னர் அதன்n பயர்­கள் வவு­னியா, முல்­லை­த்தீவு என்று மாற்­றப்­பட்­டுள்­ள­தா­க­வும். அவர் தெரி­விப்­ப­தற்கு மறக்­க­வில்லை. குறித்த பகு­திக்கு அரு­கா­மை­யில் காடு­கள் அழிக்­கப்­பட்டு பத்­துக்­கும் மேற்­பட்ட சிறு­கு­டில்­கள் அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அதே­வேளை 25 ஏக்­கர் அள­வில் பயிர்ச்­செய்­கை­யும் அவர்­க­ளால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­து­டன் நிரந்­த­ர­மாக விகாரை ஒன்றை அமைக்­கும் பணி­யும் நடை­பெற்று வரு­கின்­றது. நெடுங்­கே­ணி­யில் இருந்து பல கிலோ­மீற்­றர்­க­ளுக்­குக் காட்­டுப்­ப­கு­தி­யூடாகச் செல்­ல­வேண்­டி­ய­மை­யால் தமிழ் மக்­க­ளின் நட­மாட்­டம் குறித்த பகு­தி­யில் மிக­வும் குறை­வா­கவே காணப்­ப­டு­கின்­றது. இந்த நிலை­யில் எதிர்ப்­பு­க­ளின்றி, சிர­மங்­கள் இன்றி மிக­வும் இலா­வ­க­மாக சிங்­கள மய­மாக்­கும் செயற்­பா­டு­கள் அங்கு மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

எல் வல­யத்­துக்­குள் புகுத்­தப்­பட்ட கச்­சல்­ச­ம­னங்­கு­ளம்
கச்­சல்­ச­ம­னங் குள­மா­னது சுமார் 200 ஏக்­கர் வயல்­நி­லங்­க­ளுக்கு நீரைப் பாய்ச்­சக் கூடி­ய­நி­லை­யில் அமைந்­துள்­ளது. குறித்த குளம் வவு­னியா கம­நல அபி­வி­ருத்­தித் திணைக்­க­ளத்­தின் கீழ் இது­வரை இருந்­தது. அந்­தக் குளத்­தின் கீழ் விவ­சாய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்ட தமிழ் மக்­கள் இடம்­பெ­யர்ந்த நிலை­யில் குறித்த குளம் நீண்­ட­கா­ல­மா­கப் பாழ­டைந்த நிலை­யில் இருந்­துள்­ளது. போருக்­குப் பின்­ன­ரான காலப் பகு­தி­யில் அதற்கு அரு­கா­மை­யில் அமைந்­துள்ள ஊற்­றுக் குளம் உட்­பட பல குளங்­கள் வவு­னியா மாவட்ட கம­நல அபி­வி­ருத்­தித் திணைக்­க­ளத்­தால் சீர­மைக்­கப்­பட்­டன. ஆனால், வவு­னியா கம­நல அபி­வி­ருத்­தித் திணைக்­க­ளத்­துக்­குக் கீழி­ருந்த கச்­சல்­ச­ம­னங்­கு­ள­மா­னது அந்­தத் திணைக்­க­ளத்­துக்கு அறி­விக்­கப்­ப­டா­ம­லேயே மகா­வலி ‘எல்’ வல­யத்­துக்­குள் உள்­ளீர்க்­கப்­பட்­டது. தற்­போது குறித்த குளத்தை அனு­ரா­த­பு­ர­ மா­வட்­டத்­தின் கம­நல அபி­வி­ருத்­தித் திணைக்­க­ளமே சீர­மைத்து வரு­கின்­றது.

புதிய மாவட்­டம் உரு­வாக்­கப்­ப­ட­லாம்…!
முல்­லைத்­தீவு, திரு­கோ­ண­மலை, அனு­ரா­த­பு­ரம், வவு­னியா ஆகிய மாவட்­டங்­க­ளின் எல்­லை­க­ளின் மையப் பகு­தி­யான நெடுங்­கே­ணியை அண்­மித்த பகு­தி­க­ளில் அர­சால் மேற்­கொள்­ளப்­ப­டும் வகை­தொ­கை­யின்­றிய சிங்­க­ளக் குடி­ யேற்­றங்­க­ளால் அரச திணைக்­க­ளங்­க­ளுக்­கி­டையே பல்­வேறு நிர்­வா­கச் சிக்­கல் நிலை­மை­கள் உரு­வாக்­கி­யி­ருக்­கின்­றன. இதைக் கார­ணம்­காட்டி எதிர்­கா­லத்­தில் வடக்­கு­மா­கா­ணத்­தில் புதிய சிங்­கள மாவட்­டம் ஒன்று உரு­வாக்­கப்­ப­டும் நிலை­யும் இருக்­கி­றது. இது அர­சின் நீண்­ட­கா­லத் திட்­டம் என்­ப­தும் ஒரு சாரா­ரின் கருத்­தாக இருக்­கி­றது.

இடப்­பெ­யர்­வு­க­ளால் பாதிப்­ப­டைந்­தி­ருந்த தமிழ் மக்­க­ளின் பகு­தி­களை மகா­வலி தனக்­குள் விழுங்­கிக் கொண்டு சிங்­க­ளக் குடி­யேற்­றங்­க­ ளைப் பர­வ­லாக மேற்­கொண்­டு­வ­ரு­கி­றது. கொக்­கச்­சான்­கு­ளம், முல்­லைத்­தீ­வின் மண­லாறு ஆகியவை மகா­வலி எல் வல­யத்­துக்­குள் உள்­ள­டக்­கப்­பட்டு 3 ஆயி­ரம் குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 12 ஆயி­ரம் சிங்­கள மக்­கள் குடி­யேற்­றப்­பட்­டுள்­ள­னர். மொர­கா­கந்தை நீர்த் தேக்­கத்­தில் இருந்து மகா­வலி நீரை வவு­னி­யா­வின் சேம­மடு குளத்­துக்­குக் கொண்­டு­வ­ரும் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­கின்­றன. மகா­வலி எல் வல­யக் கருத்­திட்­டம் நிறை­வு­றும்­போது சுமார் 6 ஆயி­ரம் சிங்­க­ளக் குடும்­பங்­க­ளைக் குடி­யேற்­று­வது என எல் வல­யத்­தின் கருத்­திட்ட வரை­பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அதைச் செயற்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கையே தற்­போது கச்­சல் சம­னங்­கு­ளத்­தில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. அதன் கீழ் குடி­யேற்­றப்­ப­டு ­கின்ற சிங்­கள மக்­க­ளுக்கு அனைத்து வச­தி­க­ளை­யும் ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்­கும் அர­சா­னது போர்ப் பாதிப்­பு­க­ளால் இட்ம்­பெ­யர்ந்­துள்ள தமிழ்­மக்­கள் தொடர்­பாக எவ்­வித கரி­ச­னை­யும் கொண்­ட­தில்லை. நீண்­ட­கா­லத்­துக்­குப் பின்­னர் இந்­தி­யா­வி­லி­ருந்து நாடு திரும்பி நெடுங்­கே­ணி­யின் எல்­லைக் கிரா­ம­மான காஞ்­சூ­ர­மோட்­டை­யில் குடி­யி­ருக்­கும் தமிழ்­மக்­க­ளுக்கு அர­சால் எந்த வச­தி­க­ளும் ஏற்­ப­டுத்­திக் கொடுக்­கப்­ப­ட­வில்லை.

அழிந்­து­வ­ரும் தமி­ழர் கிரா­மங்­கள்
போர்ச் சூழல் கார­ண­மாக ஏற்­பட்ட அழி­வு­கள், இடப்­பெ­யர்­வு­கள், போருக்­குப் பின்­னர் முறை­யாக மேற்­கொள்­ளப்­ப­டாத, மீள்­கு­டி­யேற்­றச் செயற்­பா­டு­கள் கார­ண­மாக வவு­னியா வடக்­கில் உள்ள எல்­லை­யோ­ரக் கிரா­மங்­கள் மக்­கள் இல்­லா­மல் அழிந்து வரும் நிலை­யி­லுள்­ளன. குறிப்­பாக வெடி­வைத்த கல், கோவில்­பு­ளி­யங்­கு­ளம், ஊஞ்­சல்­கட்டி ஆகி­யவை அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. 40க்கு மேற்­பட்ட குடும்­பங்­கள் வசித்து வந்த வெடி­வைத்­த­கல் கிரா­மத்­தில் தற்­போது ஒரே­யொரு முதி­ய­வர் மட்­டும் வாழ்ந்து வரு­கி­றார். அது­போல கோவில்­பு­ளி­யங்­கு­ளம் பகு­தி­யில் 6 குடும்­பங்­கள் வாழ்­கின்­றன. இந்­தப் பகு­தி­யில் உள்ள இரண்டு பாட­சா­லை­கள் புதர்­வ­ளர்ந்து மாண­வர்­க­ளின் வரு­கைக்­காக ஏங்­கி­நிற்­கின்­றன. இவ்­வா­றான நிலைமை சிங்­க­ளக் குடி­யேற்­றங்­களை அமைக்க இல­கு­வா­கி­றது.

நல்­லாட்­சி­யின் கப­டத் தனம்
தமிழ்­மக்­க­ளின் பேரா­த­ர­வு­டன் ஆட்­சிக்கு வந்த நல்­லாட்சி அர­சா­னது தமி­ழர் விரோ­தச் செயல்­க­ளையே பர­வ­லாக மேற்­கொள்­கி­றது. பௌத்­த­ம­ய­மாக்­கல் செயற்­பா­டு­கள் தமி­ழர் பகு­தி­க­ளில் முழு­வீச்­சில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. அண்­மை­யில் தொல்­பொ­ருள் திணைக்­க­ளத்­தின் ஆத­ர­வு­டன் முல்­லைத் தீவின் நீரா­வி­ய­டிப் பிள்­ளை­யார் ஆல­யத்­தில் அத்­து­மீ­றிப் புத்­தர்­சிலை ஒன்று அமைக்­க­ப்பட்­டது.

அந்­தக் குழப்­பங்­கள் தீர்­வ­தற்­குள் கச்­சல் சம­னங்­கு­ளத்­தில் புத்­தர்­சி­லை­கள் வைக்­க­ப்பட்­டுள்­ளன. அதை­விட நெடுங்­கே­ணி­யின் வெடுக்­கு­நாரி சிவன்­கோ­வில், சம­னங்­கு­ளம் கல்­லு­மலை விநா­ய­கர் ஆல­யம், முல்­லைத்­தீ­வின் குருந்­தூர்­மலை என இந்­துக்­க­ளின் புரா­தன தலங்­கள் தொல்­பொ­ருள்­தி­ணைக்­க­ளத்­தால் பௌத்­த­ம­ய­மாக்க முயற்­சிக்­கப்­பட்டு வரு­கி­றது. தமிழ் அர­சி­யல் தலை­மை­கள் கொழும்பு அர­சு­டன் நெருக்­க­மான தொடர்­பு­க­ளைப் பேணி­வ­ரும் நிலை­யில் நீடித்­து­வ­ரும் இந்­தப் பிரச்­சினை குறித்­துக் கரி­சனை காட்டாதி­ருப்­பது தமிழ் மக்­க­ளைப்­பொ­றுத்­த­வரை கவ­லை­ய­ளிக்­கும் ஒரு விட­யம் என்­ப­தில் சந்­தே­க­மில்லை.

You might also like