சினிமாவின் சாதனைப் பெண்- விஜயநிர்மலா காலமானார்!!

250 படங்களுக்கு மேல் நடித்து, 40 படங்களுக்கு மேல் இயக்கி,, கின்னஸ் சாதனை படைத்த தென்னிந்தியாவின் அசைக்க முடியாத சக்தியாக இருந்த விஜயநிர்மலா இன்று திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார்.

அவருக்கு வயது 73. ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது. இதனால் தெலுங்கு சினிமா உலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

தெலுங்கு திரையுலக முன்னணியினர் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இவர் விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்த படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 15 வயதில் பார்கவி நிலையம் என்ற மலையாளப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

உலகிலேயே அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்ற பெருமையைப் பெற்று கின்னஸ் புத்தகத்திலும் இவர் இடம் பெற்றார்.

கலைத்துறையில் இவரின் சேவையை பாராட்டி, ஆந்திர அரசு உயரிய விருதான ரகுபதி வெங்கய்யா விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.

You might also like