சிறுவன் காட்டிக் கொடுத்த முட்டை!!

சீனாவில், நதிக்கரையோரம் மண்ணில் புதைந்த நிலையில் டைனோசர் முட்டை மீட்கப்பட்டுள்ளது.

குயாங்டாங்கில் வசித்து வரும் சாங் யாங்ஷீ என்ற சிறுவன் அங்குள்ள நதிக்கரையோரம் விளையாடிக் கொண்டிருந்த போது, பெரிய அளவிலான முட்டை வடிவத்திலிருந்த கல்லை அவதானித்துள்ளான்.

சிறுவன், தனது தாய் மூலம் உள்ளூர் அருங்காட்சியகத்துடன் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்தான்.

அது 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் முட்டை என்பது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டது.

அங்கு மேலும் 10 முட்டைகள் கிடைத்தன. இந்த முட்டைகளை கொண்டு, டைனோசர்கள் பற்றிய பல அரிய தகவல்களை கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like